பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置望号 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை அன்பு நிறைந்த ஒப்புரவாளன் வாழ்க்கையும் இதைப் போன்றதே (216). அவன் செல்வம் குறைந்து வறுமை புற்றபோது அந்த வறுமை நிலைக்கு அவன் வருந்துவ, தில்லை. பிறர்க்குச் செய்யத்தக்க உதவிகளைச் செய்ய முடியவில்லையே என்று நினைத்து வருந்துவான் (219). இன்னும் வள்ளுவர் பெருமான் அருள் வடிவமான பெருந்தகையாளனை மருந்துக்குப் பயன்படும் மரத்துடன் ஒப்பிட்டு விளக்குவார். மருந்து மரம் வேர், பட்டை, இலை, பூ, காய், பழம் முதலிய எல்லாவற்றையும் அளித் துப் பயன்படும். அருள் வடிவான பெருந்தகையாளன் தன் செல்வம் முழுவதையும் அவ்வாறு பயன்படுத்துவான். இதனை, மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யாளன்கட் படின் (517) என்ற குறள் ஒளியால் காட்டுவர் அப்பெருந்தகை. மருந்: தாகப் பயன்படும் மரம் தான் இல்லாமல் தன்னை முழு. வதுமே அழித்துக் கொள்வதும் உண்டு. பெருந்தகையா ளின் நிலையும் அப்படிப்பட்டதே. ஒப்புரவினால் வரும் கேட்டை அவன் தன்னை விற்றாவது ஏற்றுக் கொள் வதே தகுதி என்று துணிவான். - 5. ஈகை: மூவேழு வள்ளல்கள் வாழ்ந்த நம் நாட் டில் ஈகையைப்பற்றிப் பேசுதல் கொல்லத் தெருவில் ஊசி விற்பதோடொக்கும். அறம்நிறைந்த இல்லறவாழ்க்கை யில் ஈகை ஒரு சிறந்த கூறு. இல்லறத்தில் வாழும் அன் புடையவர் பிறருடைய வறுமைத் துன்பத்தைக் கண்டு வாளா இருத்தல் இயலாது. வெறும் பேச்சும் எண்ணமும் பிறருடைய துன்பத்தைத் தீர்க்க முடியாது. ஆகையால் தம்மாலான வறுமைத் துன்பத்தைத் தீர்க்க முயல் வதே இல்வாழ்வானுடைய கடமையாகும்; இதுவே. ஈகை எனப்படும். ஈகை என்னும் பெயரால் பொருளுடைய