பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் ஆறம் 113 வருக்கே மேன்மேலும் கொடுத்து உதவுவதால் பயன் இல்லை; அஃது ஈகையும் ஆகாது. வறியார்க்கொன்று ஈவதே ஈகை;மற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து (221) என்பது வள்ளுவம். வறியவர்க்குத் தம்மால் இயன்ற ஒன்றை ஈவதே ஈகை ஆகும். வறுமையற்ற மற்றவர்களுக் குப் பொருள் தருதல் ஈகை அன்று: அஃது ஒரு பயன் நோக்கிக் கொடுத்து வாங்கிக் கொள்ளும் முறையே ஆகும். 'குறியெதிர்ப்பையானது, அளவு குறித்து வாங்கி அவ்வாங் கியவாறே எதிர் கொடுப்பது என்ற பரிமேலழகரின் உரை இதனைத் தெளிவாக்கும். எ-டு. திருமணத்தில் வழங்கும் அன்பளிப்பு, மொய் போன்றவை. கைம்மாற்றுக் கடனும் இவற்றையொத்தவை. வறியார்க்கு ஈவதால் பெறும் இன்பமே ஈத்துவக்கும் இன்பம் (228) ஆகும் என்பது வள்ளுவர் வாய்மொழி: காரைக்குடி வள்ளல் அழகவே ரிடம் இதனை நான் கண்டு மகிழ்ந்ததுண்டு. தம்முடைய பொருளை ஈயாமல் வைத்துப் பாதுகாத்துப் பின்னர் இழந்து தவிக்கும் ‘கஞ்சப் பிரபுக்கள் இந்த இன்பத்தை என்றுமேஅறிய முடியாது. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாட லொன்றால் ஈகையின் சிறப்பை அறிய முடிகின்றது. இவர் தமிழகம் முழுவதையும் நன்கறிந்த பெருமகன். முருகாற்றுப்படை பாடி முருகன் திருவருள் சிறக்கப்பெற் றவர். இவர் அந்தணர் அல்லர் என்பது ஒளவை துரை சாமி பிள்ளையின் கருத்து. இவர் மலையும் காடும் நாடும் கடலுமாகிய நானிலப் பகுதிகளில் வாழும் மக்கள் பலரு டைய முயற்சியை முற்றும் தம் புலமைக் கண்ணால் நோக் கினார். எல்லாருடைய உள்ளமும் பொருளிட்டவில் பேரார்வமுற்று இயங்குவதைக் கண்டார். நாடுகட்குத் தலைமை தாங்கிய வேந்தர் பொதுச்சொற்பெறாது த. இ. அ-8