பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 1 & தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை அரசு புரிவதும், காடுகளில் வாழும் விலங்குகளை வேட் டையாடித் திரியும் வேட்டுவர் இரவும் பகலும் தமக்குரிய விலங்குகளைப் படுப்பதையே எண்ணி முயல்வதும் இப் புலவர் கருத்தினை ஈர்த்தன. இவர்தம் உழைப்பின் முடி வென்னை என்பதனை ஆய்ந்தார். இவரனைவர்க்கும் உண்பது தாழியும் உடுப்பவை இரண்டுமாம்" என்றும், பிறவகையில் ஒரு வேற்றுமையும் இல்லை என்றும் துணிந் தார். இவற்றை நோக்கின் வேண்டுவன சிறிதும் ஈட்டுவன பெரிதுமாதலின், மிக்கு நிற்கும் செல்வத்தால் செய்ய வேண்டுவது ஈதலாகிய அறமே என்றும், செய்யாது தாமே துய்க்கக் கருதின் அறமும், பொருளும், இன்பமும் பெறப் படாவாம் என்றும் கண்டு தெளிந்தார். இத் தெளிவு ஒரு பாடலாக வடிவம் பெறுகின்றது. தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் உண்பது நாழி உடுப்பவை இரண்டே, பிறவும் எல்லாம் ஒரொக் கும்மே; செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புன பலவே' (வளாகம்-உலகம், யாமம்-தள்ளிரவு; கடுமா-விரைந்த செலவினையுடைய மாக்கள் (விலங்குகள்); இரண்டேஅரைக்கு நான்கு முழம், மேலுக்கு இரண்டு முழம் ஆகிய இரண்டாடை, பிற-உண்டல், உறங்கல், இனம் பெருக்குதல் முதலியன பல-அறமும் பொருளும் இன்பமும்! பெரிதிட்டித் தமித்துண்பவர்பால் செல்வம் மிகுதலால் அம்மிகுதிக் காட்சி சிறிதீட்டிப் பலர். சூழ இருந்துண் 105. ஒளவையார் நல்வழி - 28. பாடல் காண்க. 106. புறம். 189.