பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - அறம் 115 பவராகிய வறியார்க்கு, அறிவு நலம் கேடெய்துவதற்கு ஏதுவாகின்றது. இதனால் செல்வர் ஈதலைக் கடனாகக் கோடல் அறனாக அமைகின்றது. இது செல்வர்க்கேயன்றி மக்கள் உலகுக்கே நலம் பயக்கின்றது. இந்த அற உணர் வுக் குறைவே இக்காலத் தொழிலாளர் கிளர்ச்சிக்கும் பொருள் முட்டுப்பாட்டிற்கும் வாழ்வு நிரம்பாமைக்கும் வாயிலாதல் தெற்றெனத் தெளியப்படுகின்றது. இந்த ஈகை குறைந்து வருவதனால், கைத்திறனும் வாய்த்திறனும் கொண்ட பேர்கள் கண்மூடி மக்களது நிலத்தை யெல்லாம் கொத்திக்கொண் டேப்பமிட்டு வந்த தாலே கூலிமக்கள் அதிகரித்தார், என்ன செய்வேன் பொத்தல்இலைக் கலமானார் ஏழை மக்கள் புனல்நிறைந்த தொட்டியைப்போல் ஆனார் செல்வர். அதிகரித்த தொகை தொகையாய்ச் செல்வ மெல்லாம் அடுக்கடுக்காய்ச் சிலரிடம்போய் ஏறிக் கொண்டு சதிராடு தேவடி யாள்போல் ஆடிற்றுத்! தரித்திரரே புழுப்போலத் துடிக்கின் றார்கள்! ஒடப்ப ராயிருக்கும் ஏழை யப்பர் உதையப்ப ராகி விட்டால் ஓர்நொடிக்குள் ஒடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப் பாநீ!97 என்பன போன்ற அடிகளையுடைய பாவேந்தரின் உலகப் பன்பாட்டு தோன்றக் காரணமும் ஆயிற்று. ஒருவர் கொடுக்கும் பொருளைப் பெற்று அதனால் வயிறு வளர்க்கும் வாழ்க்கை நல்ல வாழ்க்கையன்று. அவ் 107. பாரதிதாசன் கவிதைகள்; 53.உலகப்பன்பாட்டு.