பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置置密 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை வாறு வாழ்வதற்குக் காரணமான வறுமை ஒழிய வேண்டும். என்பதை கல் குரவு என்ற அதிகாரத்தில் விளக்குவார். வள்ளுவப் பெருந்தகை. வறுமை வந்தாலும் பிறர் உதவியைப் பெறாமல் வாழ்வதே நல்லது என்பதை "இரவச்சம்’ என்ற அதிகாரத்தில் தெளிவாக்குவர் வள்ளு. வர் பெருமான். வறுமையற்ற நல்லுலகம் வரவேண்டும் என்று அவர் விரும்பிய போதிலும் அதுவரையில் வறியவர். கள் உயிர்வாழ்வது எவ்வாறு என்பதை இரக்கத்தோடு எண்ணிய எண்ணங்களையே இரவு என்ற அதிகாரத்தில் தெரிவிக்கின்றார். அவ்வாறு இரப்பவர்க்கு ஈந்து உதவ. வேண்டும் என்னும் கருத்தையே ஈகை' என்ற அதிகாரத் தில் குறள் மணிகளாகப் பதிவு செய்து வைக்கின்றார். அவற்றின் ஒளியே அமைதியற்ற இன்றைய உலகிற்கு வழி காட்டும் விளக்கு. பிறரிடம் பொருள் உதவி பெறாமல் வாழ வழி அமைப்பது எதிர்கால நல்லுலகம்; அந்த நல்லுலகம் வரும் வரையில் அவ்வாறு பிறர் உதவி பெறாமல் வாழவல்லவர்கள் வாழ்ந்துகாட்ட வேண்டும். பிறரிடம் சென்று கையேந்தி இரக்கும் கொடுமை இல்லாத வாறு அமைவது எதிர்கால நல்லுலகம்; அந்த நல்லுலகம் வரும் வரையில் அவ்வாறு வறுமையால் வாடி இரந்து வாழத் தொடங்கியவர்கள் கையேந்திக் கேட்காதபடி குறிப்பாலேயே அவர்கள் குறையை உணர்ந்து பொருள் கொடுத்துக் கையேந்தும் காட்சி இல்லாமல் செய்ய வேண்டும். இந்தக் கருத்துகளையே ஈகை' என்ற அதிகாரத்தில் விளக்குவார் நல்வாழ்க்கைக்கு ஒளி காட்டும். வள்ளுவப் பெருந்தகை. நல்லாறு எனினும் கொளல் தீது; மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று (222) இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன்உடையான் கண்ணே உள (223) இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல் (228)