பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 1 17 என்ற குறள் மணிகளின் ஒளியில் சிந்திப்போம். கம்ப ராமாயணத்தில் வரும் மாவலிக் கதையில் சுக்கிராச் சாரியை நோக்கி மாவலி பேசுகின்றான் : ..& - - + 4 + k - - - - ... மேலோர் வள்ளியராக வழங்குவ தல்லால் எள்ளுவ என்சில? இன்னுயி ரேனும் கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால்' இதில் நல்லாறு எனினும் (222) என்ற குறளின் கருத்து நிழலிடுவதைக் கண்டு மகிழலாம். 'வல்லார் கிழான் பண்ணன்' என்பவன் கைவண்மை யும் போர்வண்மையும் உடையவன். இவன்மீது பாடிய பாட்டின்கண் சிறுகருந்தும்பியார் என்ற புலவர் பாணர்க் குக் கூறும் பாங்கில் (பாணாற்றுப்படையாக) இவனது வள்ளன்மையை எடுத்து விளக்குவார். பாணனே, பண்ணன், வல்லார் என்னும் ஊரின்கண் உள்ளான்; வறுமையால் உண்ணாது வருந்தும் நின் சுற்றம் உண்டு வாழ்தல் வேண்டுவையாயின், வல்லார் கிழானான பண்ணன் பகைப்புலம் நோக்கிச் செல்வதற்குள்ளே உன் பசிக்குப் பகையாகிய பரிசில் பெறுவதற்கு இப்பொழுதே செல்வாயாக’’ என்று ஆற்றுப்படுத்துகின்றார். புலாஅல் அம்பின் போரரும் கடிமிளை வலாஅ ரோனே வாய்வாட் பண்ணன் உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின் இன்னே சென்மதி நீயே; சென்றவன் பகைப்புலம் படரா அளவை நின் பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே" (புலால் அம்பு-புலால் நாறும் அம்பு; கடிமிளை-காவற் காடு; வறும்க டும்பு-வறிய சுற்றம்; உய்தல்-பிழைத்தல்; 108. பால. வேள்விப்படலம்-29 109. புறம்-181.