பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏盈& தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை இன்னே - இப்பொழுதே, சென்மதி - செல்வாயாக: பகைப்புலம்-போர்க்களம்) என்ற பாடற்பகுதியில் இதனைக் காணலாம். கழைதின் யானையார் என்ற சான்றோர் வல்வில் ஒரியின் ஈகைப் பண்டை எடுத்து விளக்குகின்றார். ஒரு. பாடலில், பரிசில துறையில் அமைந்த இப்பாடலில், ஈவோர்க்கும் ஏற்போர்க்கும் உள்ள உயர்வு தாழ்வுகளை எடுத்தோதுகின்றார். ஈவோர் ஈயேன் என்பதால் ஏற்போ ரினும் இழிந்தவராவர் என்றும், ஏற்போர் கொள்ளேன் என்பதால் ஈவோரினும் உயர்ந்தவராவர் என்றும், விளக்கு கின்றார். உண்ணும் நீர்நிலை வற்றிச் சேறு பட்டதாயி னும் அதனை நாடிச் செல்வோர் பலராவது போல, வரையா ஈகையுடையோரை நாடிப் பலரும் வருவர்;. வருவோர் ஒருகால் தாம் வேண்டியது பெறாவிடின் அவர் தம்மை நொந்துகொள்வதன்றிக் கொடாத வள்ளியோரை நோவார் என்று இதில் குறிப்பிடுவர். பாடலின் பகுதி: இது: ஈயென இரத்தல் இழிந்தன்று அதன்எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன்எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்றுப0 இழித்தன்று - இழிந்தது; உயர்ந்தன்று - உயர்ந்தது. என்பது. ஈயென இரத்தலும் ஈயேன் என மறுத்தலும், இழிவென்றும், இரப்போர் குறிப்பறிந்து கொள்ளெனக் கொடுத்தலும் கொடுக்கும்போது கொள்ளேன் என மறுத்தலும் உயர்வு என்றும் எடுத்தோதி ஒரியை நோக்கி: “இவ்விரண்டனுள் நீ விரும்புவதைச் செய்க' எனப்புலவர் கூறுகின்றார். இரத்தலின் இழிவு தோன்ற இழிந்தோன் 110, புறம் 204