பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் அறம் I 9. கூற்றால் ஈயெனச் சொல்லி இரத்தல் இழிந்தது எனக் காட்டினார். ஈயென் சிளவி இழிந்தோன் கூற்றே என் பது தொல்காப்பியம் (தொல், எச்ச,49). இழிவு பயக் கும் இன்மைச் சொல்லைச் சொல்வி இரப்பார்க்கு இன்மை உண்மையான் இரத்தலாலுண்டாகும் இழி வன்றிப் பிறிதில்லை; ஈயேன் என மறுக்கும் செல்வர்க்கு தாம் தம் உடைமையை மறைத்துப் பொய் மொழிந்து அவ்வின்மைச் சொல்லால் பிறக்கும் இழிவையும் மேற் கொண்டு அதனைக் கூறி மறுத்தலால், இவன் என்னும் எவ் வமும்,பொய்மொழியால் உளதாகும் இழிதகவும் ஆக மிக்க இழிவு உண்டாதல் பற்றி ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று என்று கூறினார். ஏற்பார் பால் ஈயென்னும் சொல் பிறவாமையால், கொள்ளெனச் சொல்லிக் கொடுத்து ஏற்பித்தால், செல்வர்க்குப் பிறர்பால் இழிவை மறைத்து, ஒம்புதலால் புகழ் உண்டாகி உயர்வு தருதலின் கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று” என்றும் கூறினார். தான் இரந்து கொடுத்தலாவது ஏற்பாரைத் தான் பணிந்து நின்று தான் கொடுப்பதை ஏற்பித்தல்; இப் பணிவு செல்வர்க்குப் பெருஞ்செல்வமாம் தகைமையுடையதெனப் பொய்யா மொழியாரும் புகல் வர். இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு (224) என்பது வள்ளுவம். கொள்ளேன் என்பதால் பிறக்கும் பெருமிதம், கொடுக்கப்படும் பொருள் பிறர்க்குக் கொடுக் கப்பட்டுப் பயன்படுமாற்றால் பிறக்கும் புகழினும் தான் உரிமை எய்தி மேம்படுதலின் அதனினும் உயர்ந்தன்று” என்றார். இங்ங்னம் சிந்தித்து நயங்கண்டு மகிழலாம். இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை இவை ஒருவரால் எடுத்துச் சொல்லப்படா மலேயே எவர்க்கும் விளங்கும். அப்படியிருந்தும், சிலர் ஈயாமல் சாகின்றனரே என்று கழிவிரக்கம் கொள்ளுகின் றார் பட்டினத்தடிகள்.