பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை பிறக்கும் பொழுது கொடுவந்தது இல்லை; பிறந்துமண்மேல் இறக்கும் பொழுது கொடுபோவ(து) இல்லை; இடைநடுவில் குறிக்கும்.இச் செல்வம் சிவன்தந்தது என்று கொடுக்கஅறியாது இறக்கும் குலாமருக்கு என்சொல்லு வேன்; கச்சி ஏகம்பன்ே.' என்று கச்சி நகர் ஏகாம்பர நாதரை நோக்கிப் பேசுவது போல் நம்மைத் தெருட்டுகின்றார். சமன் முனிவர் ஒருவர் ஈயாமைக் குணமுடையாரை நோக்கிப் பேசுவது மிகவும் நயமுடையதாகும். துய்த்துக் கழியான் துறவோர்க்கொன் lகலான் வைத்துக் கழியும் மடவோனை - வைத்த பொருளும் அவனை நகுமே உலகத்து அருளும் அவனை நகும்,' "அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை' (குறள் - 247), 'அறனும் அருளுடையான் கண்ணதேயாகும் ( J என்று கூறியவாறு தானம் முதலிய நற்கருமங்களைச் செய்து நற்கதியை அடைவதற்குக் காரணமான் அருளைச் சிறிதும் உடையனாகாமல் பொருளைப் பாழ்படுத்தினது பற்றி அவ்வருள் இவனை நோக்கிச் சிரிப்பதாயிற்று; அருளுடையவனாக நின்றுப்பிறர்க்குக் கொடாவிட்டாலும் தானாவது துய்க்கலாமே. அதுவும் செய்யாமல் பொருளை ஈட்டுதலையே பயனாகக் கருதிக் காலம் கழித்த அறியா மையை நோக்கி அதே பொருளும் சிரிப்பத்ாயிற்று. இங்கே ந்குதல் இகழ்த்ல் காரண்மாக் உண்டாயிற்று என்பது அறியத்தக்கது. பட்டின்த்தடிக்ளும் ஓரிடத்தில், 111 பட்டின-பிள்ள்ை-பாடல் - திரு.ஏகம்ப மாலை-7 112. நாலடியார்-273