பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi வருகின்றான்; ஒல்லும் வகையெல்லாம் என்தகுதிக்கேற்ப உதவியும் வருகின்றான். இந்த நிலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தைத் துரண்டி அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் மூன்று நிகழ்த்துமாறு ஆணையையும் பிறப்பிக்கச் செய்தான். கரும்பு தின்னக் கூலிகொடுக்கும் பல்கலைக் கழகம் டாக்டர். (திருமதி) கிருட்டினா சஞ்சீவிதிருமதி கண்ணம்மாள் நடேசன் அறக்கட்டளைச்சொற்பொழிவுகளை (1986-87க்குரியவை) நிகழ்த்துமாறு 14.5.1987ல் அழைப்புவிடுத்தது. அறக் கட்டளை நிறுவிய டாக்டர் ந. சஞ்சீவியைக் கலந்து யோசித்த போது தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதிமுறைமை' என்ற தலைப்பில் மூன்று நாள் மூன்று சொற் பொழிவுகளை நிகழ்த்த முடிவு ஆயிற்று. அங்கினமே மார்ச்சு 28, 29, 30 (1988) நாட்களில் முறையே அறம், நீதி, முறைமை பற்றி மூன்று சொற்பொழிவுகளை நிகழ்த்தி னேன். இச்சொற்பொழிவுகளை என்பொறுப்பில் வெளி யிட்டுக் கொள்ள இசைவும் வழங்கியது பல்கலைக் கழகம். இசைவுவழங்கியமைக்கு என் நன்றி. ஐந்தினைப் பதிப்பக உரிமையாளர் திரு குழ.கதிரேசன் அவர்களின் பரிந்துரையின் பேரில் என் அருமைத்தம்பி திரு. வெள்ளையப்பன் (உரிமையாளர், தேன்.மழைப் ப தி ப் ப க ம் ஆ ல ந் து ர், .ெ ச ன் ைன - 16) இப் .ெ பா ழி வு க ைள மனமுவந்து ஏற்று வெளியிடுகின் றார். இவர்கள் இருவருக்கும் என் உளங் கனிந்த நன்றி என்றும் உரியது. இப்பொழிவுகளைக் கவினுற அச்சிட்டுக் கற்போர் கைகளில் தவழச்செய்த ஜெய்பூரீஅச்சகத்தாருக்கு, குறிப்பாக அதன் அதிபர் திரு. கே. பி. பிரசாத்துக்கு, என் நன்றியைப் புலப்படுத்துகின்றேன்.