பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 盈名夏 ஈயா மனிதரை ஏன்படைத் தாய்கச்சி ஏகம்பனே' என்று கழிவிரக்கம் கொள்வார். கான்காவது பகுதியில் இல்வாழ்வானிடம் அமைந் திருக்க்வேண்டிய குணநலன்களைக் கூறும் நடுவு நிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்க முடைமை, பிறனில் விழை யாமை, பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில் சொல்லாமை, தீவினை அச்சம், புகழ் என்னும் பதினோர் அதிகாரங்கள் ஒரு தொகுப்பாக அமைந்துள்ளன. இவற்றையும் ஒவ்வொன்றாகக் கருது வோம். . 1. நடுவு நிலைமை: அறநெறி வாழ்க்கையில் நடு நிலை தவறாமல் நீதியைப் போற்றுதல் வேண்டும். ந்ம்மவர், பிறர் என்ற பாகுபாட்டுடன் வகை செய்து நடத் தல் ஆகாது. அறம் எல்லோருக்கும் பொது என்ற உண்ர்வு மேளக் கச்சேரியில் ஒத்து ஊதுதல் போன்று இடை யறாது இருக்குமாறு செயல்கள் ஆற்றப் பெறுதல் வேண்டும். நடுநிலையைக் கடந்த செயலால் நற்பயன். விளைவதில்லை. ஒருகால் நன்மை உண்டாவதாக இருந்தாலும், நடுநிலை தவறி உண்டான ஆக்கம் என்று உடனே அதனைக் கைவிடுதல் வேண்டும். தன் நன்மை தீமையை மறந்து அறத்தைப் போற்றுவதற்கு அதுவே நேரிய நெறியாகும். நன்றே தரினும் நடுஇகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல் (113) என்பது வள்ளுவம். தன்னலத்தால் நடுவுநிலை கடந்து வாழ்பவர்கள் நன்மை பெற்று வாழலாம்; செல்வாக்குடனும் திகழலாம். 113. பட்டின. பிள்ளை பாடல்-திரு ஏகம்ப மாலை-21