பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置爱楚 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை இந்தச் செல்வாக்கினால் நடுநிலை கடந்த குற்றமும் மறைக்கப் பெறலாம். ஆனால் ஒருகாலத்தில் இந்தக் குற்றம் அம்பலமாகி விடும். வாழ்நாட் காலத்தில் செல் வாக்கின் போர்வையால் மாசற்றவர்போல் தோன் நினாலும் பிற்காலத்தில் உண்மையே ஒளிவிட்டுப் பொலிவு தரும். தக்கவர், தகாதவர் என்ற உண்மை வாழும்போது மாயைபோல் புலனாகாவிடினும், அவரவர்கட்கும். பின்னர் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் தெளிவாக அறியப்படும். தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும் (114) என்பது வள்ளுவர் வாய்மொழி. இறந்த பின்பும் அழி யாமல் நிற்பதால் பழியும் புகழும் எச்சம் எனப்பட்டது. 'இசை என்னும் எச்சம் (238) என்பது வள்ளுவர் பெரு மான் குறிக்கும் அருமையான சொற்றொடர். நடுநிலைமையைச் சிறந்த அறமாகக் கொண்டு போற்று வோர் கடைப்பிடிக்க வேண்டிய பேருண்மை ஒன்று உண்டு. வாழ்வு என்பது எப்போதும் உயர்வும் தாழ்வும் உள்ள ஒர் அமைப்பு. இதைச் செய்தால் உயர்வு பெற லாம் என்ற அவா உறுதலும், இதைச் செய்தால் தாழ்வு நேரும் என்ற அச்சம் உறுதலும் இயல்பு. இவ்வாறு, அவாவும் அச்சமும் கொள்வதால் நடுநிலைமை கடந்தா வது உயர்வு பெற வேண்டும் என்ற எண்ணம் முகிழ்க்கும். கேடும் ஆக்கமும் வாழ்க்கையில் இயல்பானவை என்று உணர்ந்து நெறி தவறாமல் வாழ முற்பட்டால், வருவ தைக் கருதாமல் கடமையை நடுநிலையில் நின்று ஆற்ற லாம். நடுநிலையைப் போற்றுவோர் துலாக்கோலை நோக்கினால் ஒரு பேருண்மை தட்டுப்படும். தான் சம மாக நின்று பிறர்க்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் தன்னிடம் வைக்கப் பெற்ற பொரு னின் எடையை துலாக்கோல் உள்ளவாறு அறிவிப்பதைக்