பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 1 2 3 காணலாம். இதுவே பெருமைக்குக் காரணமாக இருப்பது. அதுபோல் சமநிலையில்:நின்று ஒரு சார்பாகக் கோணாமல் நடப்பதே சான்றோர்க்கு அழகாகும். சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி (118) என்பது பொய்யாமொழி. உள்ளத்தில் கோணுதல் இல் லாத தன்மையே முன்னர் உறுதியானால் சொல்லில் கோணல் பிறக்காது (119). இந்த நடுநிலைமை சிறப் பாக வணிகர்கட்கு மிகவும் இன்றியமையாதது. பொரு, ளைக் கொடுத்துப்பணமாக்கும் அவர்களுடைய தொழிலில் கொடுப்பதையும் குறையக் கொடுக்காமல் கொள்வதையும் மிகக் கொள்ளாமல் நடுநிலைமை வேண்டும். பிறருடைய பொருளையும் தம் பொருளெனப் போற்றி வாழ்வார்களா னால் வாணிகத்தைத் தொழிலாகச் செய்வார்க்கு நன்மை பயக்கும் (120). இக்கால வணிகர்களில் பலர் துலாக்கோ லையே தந்திரமாக இயங்கச் செய்து கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றதை எம்மருங்கும் காணலாம், சமன் செய்து சீர்தூக்கும் கோல் போன்ற நல்ல வணிகரை, கொடுமேழி நசையுழவர் நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர்' (பகல் - பகலாணி) என்று பேசும் பட்டினப்பாலை. இவர்களின் செயலையும். கொள்வதும் மிகைகொளாது கொடுப்பதுாஉங் குறைகொடாது, பல்பண்டம் பகர்ந்துவீசும் தொல்கொண்டித் துவன்றிருக்கை' 114. பட்டினப் பாலை - அடி 205 - 207. 115. டிெ. அடி. 210-212