பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை என்று விளக்கும். இக்கருத்தை கலித்தொகையிலும் 'கவி . 86) பால்கொளல் இன்றிப் பகல்போல் முறைக்கொல்கா கோல்செம்மை யொத்தி பெரும! (பகல் - பகலாணி) என்ற அடிகளில் காணலாம். இது தலைவி மகனை நோக்கி (மறைந்து நிற்கும் தலைவன் கேட்பக்) கூறியது. தொல்காப்பிய - அகத்திணையியல் நூற்பா (28) உரையில் நச்சினார்க்கினியர் வணிகர்க்குரிய விரதமாவன: கொள் வதுமே மிகை கொள்ளாது, கொடுப்பது உம் குறை கொடாது பல்பண்டம் பகர்ந்து ஈதல்' என்ற பட்டினப் பாலை அடிகளை அப்படியே எடுத்தாள்வர். பழமொழி யாசிரியரும், -ஒத்துச் சகத்தனாய் நின்றொழுகும் சால்பு தவமே நுகத்துப் பகலாணி போன்று' (ஒத்து - (மனம்) பொருந்தி, சகத்தனாய் - ஒன்றுபட்ட வனாகி; சால்பு - அமைதி) என்று இப்பண்பை எடுத்துக் காட்டுவர். இவை யாவும் இல்வாழும் வணிகரின் அறத்தை எடுத்துக் கூறுவனவாகும். 2. அடக்கமுடைமை : எண்ணத்தாலும், பேச்சாலும், செயலாலும், இல்வாழ்வார் அறத்தைப் போற்ற வேண்டு மானால் மனம்,மொழி,மெய் என்பவற்றைத் தம்ஆட்சியின் கீழ் வைத்திருக்கும் ஆற்றல் பெற்றிருத்தல் வேண்டும். உடல் அடக்கம், நிலை அடக்கம், புலன் அடக்கம், நாஅடக்கம், சினம் அடக்கம் என் எல்லா அடக்கங்களும் அடங்கி ஒத்துழைக்கும் வாழ்வே சிறந்த வாழ்வு ஆகும். இவை எல்லாம் நிலையில் உையர்ந்தவர்கட்கு முக்கிய மானவை என்பது, مسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسامسسسسسسسس-- 116. பழமொழி - 339