பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லார்க்கும் நன்றாம் பணிதல், அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து (125) என்ற வள்ளுவத்தால் பணிக்கப்பெறுகின்றது. அடக்கம் ஒருவனை மேன்மேல் உயர்த்தவல்லது; சிறந்த நன்மக்க ளிடம் சேர்க்கவல்லது அடங்காமையே, செறிந்த இருள் போன்ற தீய வாழ்க்கையில் கொண்டுசெலுத்திவிடும்(121). ஆகையால், உயிர்க்கு உறுதி பயப்பதில் அடக்கத்தை விட வேறொன்றும் இல்லை. அஃது உயர்ந்த சூழலை உண் டாக்கித் தந்து அருஞ்செயல்களை ஆற்றும் வல்லமையை மிகுவிக்கின்றது. அடக்க முடையார், மலைபோல மதிக் கப்பெறுவர். மேற்குறிப்பிட்ட அடக்கங்களுள் எதனைக் காக்க முடியாமற் போனாலும் நாவடக்கத்தையாவது முக்கியமாகக் காத்தல் வேண்டும். ஏன் எனில், தீயால் சுட்ட புண் புறத்தில் வடு ஏற்படுத்தினாலும் உள்ளத்தில் ஆறிவிடும்: ஆனால், நாவினால் சுட்டபுண் உள்ளத்தில் வடுஏற்படுத்தும்; அந்த வடு எப்போதும் ஆறுவதில்லை. நாவடக்கத்திற்கு வழி மனத்தை வெகுளி இல்லாமல் காத்தல். இவ்வாறு ஒழுக வல்லவனை அறம் தானே. தேடிச் செல்லும்; உரிய வழியில் சென்று அவனுடைய செவ்வியை அறம் பார்த்துக்கொண்டிருக்கும் (180). 3. ஒழுக்கமுடைமை : உயிர் எல்லாப் பொருளையும் விடச் சிறந்தது என்பதை நாம் அறிவோம். ஆயினும் அந்த உயிருக்குச் சிறப்புத் தரவல்லது ஒழுக்கம். ஒழுக்கம் என்பது தொடர்ந்து நடக்கும் நடக்கையாகும். மழை யொழுக்கு, ஆற்றொழுக்கு என்ற வழக்குகளை நினைவு கூறலாம். சமய நூல் வல்லார் பக்தியை தைலதாரையாகதைல ஒழுக்காக-விளக்குவதையும் காணலாம். வள்ளுவர் வாய்மொழியில் ஒழுக்கம் என்பது நல்லொழுக்கத்தையே குறிக்கும். பல அதிகாரங்களில் பல சந்தர்ப்பங்களில் குறித்த நல்லொழுக்கங்களை இடைவிடாமல் தொடர்ந்து கடைபிடித்து ஒழுக வேண்டும் என்பதை வற்புறுத் துவதற்காகவே இதற்குத் தனி அதிகாரம் நிறுவப்