பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷爱6 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை பெற்றுள்ளது. மனத்தை அளந்தறிவதற்கு வாய்ச்சொல் ஒரு கருவியாக அமைகின்றது. வாயில் பிறக்கும் சொற் களின் நன்மை தீமையைக் கொண்டு ஒருவருடைய ஒழுக்கத்தை இன்னதென அறியலாம். ஒமுக்க முடையார் வாயில் தவறியும் தீயசொற்கள் பிறக்கா. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் (188). இதற்கு எதிர்மறை யான தி யொழுக்கத்தை இதே குறளில் காட்டுவார் - அஃது என்றும் இடும்பை தரும் ஒன்று விளக்குவார். பிறப்பொழுக்கம் என்று ஒன்றை நினைவு கூட்டும் வள்ளுவர் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’ (134) என்று விளக்குவார். குலம் சுரக்கும் ஒழுக்கம்.' என்று கம்பன் பிறந்த சூழலின் நல்லொழுக்கத்தை விளக்குவார். பழமொழி ஆசிரியரோ, இழுக்கத்தின் மிக்க இழிவில்லை இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு. * என்று விளக்குவார். இது வள்ளுவரின், ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை: இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி (137) என்ற குறளுக்கு விரிவுரைபோல் அமைந்துள்ளது. 'குடிமையாவது குடிப்பிறப்பிற்கு ஏற்ற ஒழுக்கம்’ (தொல் - சொல். 57) என்று நச்சினார்க்கினியர் தொல் காப்பிய உரையில் கூறுவார்; வள்ளுவர் ஒழுக்கமுடை மையைக் குடிமை (133) என்று விளக்குவர். இல்வாழ்க் கைக்குக் குடித்தனம்' அல்லது குடிமை என்ற பெயர் களும் உண்டு. அது, தொடர்ந்த நல்லொழுக்கத்தால் நற்குடியாகவும், இடைவிடுவதால் இழிந்த பிறப்பாகவும் எண்ணப்படும் (133). உலகத்தோடு ஒட்ட ஒழுகல்" 117. பாலகாண். நாட்டு - 38. 118. பழமொழி - 15.