பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - அறம் 1 27 (140) என்ற ஒரு கருத்தை நினைவூட்டுகின்றது. வள்ளு வம். இங்கு உலகம்’ என்பது சான்றோர் உலகத்தைக் குறிக்கின்றது. இந்தச் சான்றோர் உலகத்தோடு ஒட்ட ஒழுகுதல் - பொருந்த ஒழுகுதல்-கற்கப்பட வேண்டும். பல நூல்களைக் கற்றவர்கள் - கற்றுத் தேர்ந்தவர்சள்-இதைக் கல்லாதவர்கள் அறிவில்லாதவர்கள். உலகத்தோடு ஒட்ட ஒழுகுதலை உயர்ந்தோர் பலரும் ஒழுகியவாற்றால்'ஒழுகு தல்’ என்று விளக்குவர் பரிமேலழகர். சமண முனிவர் உலகம் அறியாமையை நெய்யிலாப் பாற் சோற்றிற்கு நேர்' என்று ஒப்புமை காட்டி விளக்குவர். குலம்தவம் கல்விகுடி மைமூப் பைந்தும் விலங்காமல் எய்திக் கண்ணும் - நலம்சான்ற மையறு தொல்சீர் உலகம் அறியாமை நெய்யிலாப் பாற்சோற்றின் நேர்.' (குலம் - உயர்குடிப் பிறப்பு: தவம் - விரத ஒழுக்கம்: குடிமை - குடித்தனச்செல்வ வளம்; மூப்பு-பிராய முதிர்ச்சி, பால்சோறு - வெண்ணிறமான சோறு) என்ற நாலடியார் காண்க. நெய் இல்லா உண்டி பாழ்'9 என்ற ஒளவையார் பொன்மொழியையும் ஈண்டு நினைத் தல்தகும். இத்தகைய ஒழுக்கத்தை உயிரினும் ஒம்பிக் காக்க வேண்டும் என்பதை, பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்; தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை (132) என்ற குறள்மணி ஒளியால் தெளியலாம். பாலுணர்வை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் ஒழுக்கத்தை அறுதியிடும் பழக்கம் நடைமுறையிவிருப்பதை நாம் அறிவோம். இவர்கள் அகத்துறையிலுள்ள உடன் போக்கு முறையைக் கூட பழித்தும் இழித்தும் கூறும் TT19. Toro. 333. 120. நல்வழி-24.