பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33& தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை 'பிரகஸ்பதிகள். இவர்கள் தம் அறியாமையால் இளமங். கையரைக் காமுகர் கடத்திச் செல்வதுடன் ஒப்பிட்டுப் பேசுவதாகத் தெரிகின்றது. முன்னையதில் தலைவி, தோழி, தலைவன் ஆகிய மூவரும் நன்கு யோசித்துத் தலைவியின் கற்பை நிலை நிறுத்துவதற்காக மேற். கொள்ளும் முறை; அக இலக்கணம் ஒப்புக் கொண்ட முறை. பின்னதில் கற்பழிப்புக்காகக் காமுகர் கையாளும் முறை; இது சமூகத்தில் நடைபெறும் பெருங் குற்றமாகும். தவிர, பாலுணர்வு பற்றிய வழக்குகளில் பெரும்பாலும்: ஆண்களே குற்றம் புரிபவர்களாக இருக்கின்றனர்; பெண் கள் அப்பாவிகள். இதைக் கருதிதான் ஒளவையாரின், எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்ற புறப்பாட்டும் எழுந்தது போலும்! 4. பிறன் இல்விழையாமை இல்வாழ்வாருக்கு அமைய வேண்டிய குண நலன்களுள் தலையாயது இப்பண்பு. ஆட வன் ஒருவன் மங்கை நல்லாள் ஒருத்தியைத் திருமணம் புரிந்து கொள்ளும் நோக்கம் இல்லறக் கடமைகளைச் செவ்வனே செய்வதற்கேயல்லாமல் பிறிதில்லை என்பதில் தெளிவு இருந்தால் பிறன்இல் விழைதல் நிகழாது. உல. கத்தில் பிறருக்குத் தீங்கு இழைத்தல் கூடாது என்ற அற நூலின் முடிவையும், பிறருடைய உரிமையைக் கெடுக்கக் கூடாது என்ற பொருள் நூலின் முடிவையும் ஆய்ந்து கண்டவர்களின் வாழ்க்கையில் பிறருடைய மனைவியை விரும்பி ஒழுகும் அறியாமை இல்லை என்பர் வள்ளுவப் பெருந்தகை (141). அறநெறி தவறி வாழ்வோர் பல வகைப் படுவர். அவர்களுள் பிறன் மனைவியை விரும்பிப் பிறன் வாயிலில் சென்று நிற்பவர்களே கீழ்ப்பட்டவர்கள். அவர்களையொத்த பேதைகள் இவ்வுலகில் யாண்டும் இலர். 121. புறம் - 187