பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 129 அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல் (142) என்பது வள்ளுவம். இத்தகையவர்களைப் பிணம் போல் கருதி ஒதுக்க வேண்டும். இவர்கள் உயிருடன் இருப் பினும் நடைப்பிணத்திற்கு ஒப்பாவார்கள். இல்லற தர்மத்தில் நிலை நிற்பவர்கள் தம் நிலையை விட்டுத் தாழ்ந்தால் அவர்கள், தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை (994) என்று பிறிதோரிடத்தில் கூறப்பெற்ற வள்ளுவத்திற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாவார்கள். தினையளவும் எண்ணிப் பாராமல் காமத்தால் மயங்கி இச்சிறு செயலில் இறங்கினால் அவர்கள் தம் பெருமைகளை எல்லாம் இழந்து சிறுமையையே அடைவார்கள் (144). இச்சிறிய செயல் எளிதில் கைகூடுகின்றது என்ற காரணத்தால் அறத்தை மறந்து பிறன் மனைவியை நாடுகின்றவன் எக்காலத்திலும் தீராத பெரும் பழியை அடைவான். எளிதென இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி (145) என்பது வள்ளுவம். மேலும் பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கும் பிறன் மனையாளை விரும்புகின்றவ னிடம் நீங்காமல் சேரும். அறநெறிப்படி இல்வாழ்க்கை நடத்துகின்றவன் பிறன் மனைவியின்மீது காமப் பார்வை செலுத்தாமல் வாழ்வது பேராண்மையாகும்; இந்தப் பேராண்மையே சான் றோர்க்கு அறமுமாகும்; ஆன்ற ஒழுக்கமுமாகும். பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு (148) 9 سس-تي.. ( و ، تقع