பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏森姆 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை காம நோக்கம் ஒழுக்கக் கேட்டிற்கு வழி அமைத்து அப் பெண்மணியின் மனத்தை கெடுப்பதாதலின், அவ்வாறு நோக்காமல் வாழ்வதை வள்ளுவர் போற்றுகின்றார்; பேராண்மை என்கின்றார்: அறம் என்கின்றார்; நிறைந்த ஒழுக்கம் என்கின்றார். ஒரு மாதுக்கு வேறாக இன்னொரு மாதை விரும்புவது இயற்கைத் தவறு. இத் தவறு இழைத்த காரணத்தாலும் தம்பிரான் தோழருக்குக் கண்கெட்டு நோய் மூண்டு இன்னல் மிகுந்தது. பிறன் மனைவியை விரும்பிய இராவனேசுவரன் சுற்றத்தோடு அழிந்தான். விர தசாரிணி வடிவில் இருந்த திரெளபதியை விரும்பிய கீசகன் பலாயனன் வடிவில் இருந்த வீமனால் விண்ணுல குக்கு அனுப்பப்பட்டான். மார சர்யகத் தால் உயிர் மாளினும் வசைஇலாத மரபின்வந் தோர், பிறர் தாரம் ஆனவர் தம்முகம் பார்ப்பரோ? தக்கவர்க்குத் தகவுஇவை யேகொலாம்’’’ என்று பேசுகின்றார் வில்லிபுத்துாராழ்வார். இது இசகனை நோக்கி திரெளபதி கூறியது. சீதைக்கு உரிய இராமனை விரும்பியதால் சூர்ப்பணகை மூக்கறுபட்டாள். மணிமேகலையில், காயசண்டிகை வடிவுடன் வந்த மணி மேகலையை விரும்பிய உதயகுமாரன் காயசண்டிகையின் கணவனான காஞ்சனனால் கொலையுண்டதும் இக் காரணம் பற்றியே. 5. பொறையுடைமை; பொறையுடைமை இல்லறக் குணங்களுள் ஒன்று. பொறுத்தவர் பூமியாழ்வார்’ என் பது பழமொழி. பாண்டவர்களில் தருமன் பொறையுடை மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றான். பொறு மையைப் போற்றுகின்றவர் நிலத்தை நோக்கித் கற்க வேண்டும். தனக்கே குழிப்பறிக்கின்றவர்களையும்’ அது: 122. வில்லி பாரதம்-கீசகன் வதை-6