பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi; ஜஸ்டிஸ் S. நடராசன் அவர்கள் நாடறிந்த நல்ல. மனிதர்; அடக்கமான பண்புடையவர். இவருடைய நட் பினைப் பெற்றது இறைவனது திருவருளாலா கும் பல்லாண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றி நேர்மை யையும் திறமையையும் நிலை நாட்டிய இப்பெருமகனா ரைத் தமிழக அரசு உயர்நீதி மன்றத்து நீதிபதியாக்கியது. பல ஆண்டுகள் அப்பொறுப்பை வகித்துப் பணியாற்றி "சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல அமைந்து ஒரு பால் கோடாமையாலும் தமது நேர்மையை யாவரும் கண்டதாலும் நடுவண் அரசு இவரை உச்சநீதி மன்றத்து நீதிபதியாக்கியது. இங்கு இவர் பல பொறுப்புகளில் அரும் பணியாற்றி நற்பெயர் எடுத்ததை இந்திய துண்ைக் கண்டம் நன்கு அறியும். இவருடைய அமைதி, அடக்கம் சீலம், பரிவு முதலிய அருங்குனங்கள் குலத்தளவே ஆகும் குணம்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப அமைந்தன. நல்ல சூழ்நிலைகளில் பெற்ற கல்வியும் இவற்றிற்கு மெரு. கூட்டியது. இவருக்குப்பெருமதிப்பையும்நல்கின. இறையன் பிலும் மெய்ப்பொருள் கருத்துகளிலும் ஆழங்கால் பட்டு நிற்பவரும் இலக்கிய இன்பத்தில் ஈடுபாடு கொண்டவரும் "உயர் திணை என்மனார் மக்கட்சுட்டே, பண்புடையார் பட்டுண்டு உலகம்’ என்ற ஆன்றோர் பொன்மொழிகட்கு இலக்கியமாகத் திகழ்பவருமான இந்த அருங்குணச் செல் வரின் அணிந்துரை பெற்றது இந்நூலின் பேறாகும்: அடியேனது பேறுமாகும். அணிந்துரை அருளிய பெரியா ருக்கு என் இதயம் நிறைந்த நன்றி என்றும் உரியது. இந்த அரிய நூலைச் சட்டக்கலை வல்லார் பரமபத் வாசி திரு மாடபூசி அனந்தசயனம் அய்யங்கார் அவர்கட்கு அன்புப் படையலாக்கி மகிழ்கின்றேன். திரு அய்யங்கார் பீகார் மாநில ஆளுநராகப் பணியாற்றித் திருப்பதியில், சொந்த ஊரில், சொந்த இல்லத்தில் குடியேறிய நாள் முதல் (1962) அவர் பரமபதித்த நாள் வரை (1978) அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் கிடைத்த்ன்ம்