பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鲨岛 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை தவிர,இந்த இருவரிலும்-ஒறுத்தவரிலும் பொறுத்தவரிலும்உள்ளத்தளவில் யார் இன்பம் உற்றவர் என்றும் யோசிக்க லாம். ஒறுத்தவர் அடைவது சினம் கொண்டு ஒறுத்த அந்த ஒரு நாள் இன்பமே; பொறுத்தவர்க்கோ நிலைத்த இன்பமும் உண்டு; உலகம் அழியும் வரைக்கும் புகழும். உண்டு. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்; பொறுத்தார்க்குப் பொன்றுந் துனையும் புகழ் (156) என்பது பொய்யாமொழி. ஆகையால் பிறர் தீமை, செய்த போதிலும், அதற்காக அவர்கள்மேல் சினம் கொள் ளாமல், அத் தீய செயலால் அவர்கட்கு வரக்கூடிய துன்பத். திற்காக மனம் வருந்தி, பதிலுக்குத் தீமை செய்யாமலிருப் பதே நன்மையாகும் (156), தீமை செய்தவரை எதிர்த், தடக்கி வெல்ல வேண்டும் என்று முயல்வது உலகியற்கை; சிலர் இந்த வழியைக் கடைப்பிடிக்க முயல்வதும் உண்டு. மனச் செருக்கினால் அவர் தீமை செய்கின்றார் என்பதை அறிந்தும் அவரை எதிர்ப்பதால் பயன் ஒன்றும் இராது. அதைவிடத் தம் பொறுமையால் பொறுத்திருப்பதே வெல்லும் வழியாகும் என்கின்றார் வள்ளுவர் பெருமான். நோ நொந்து அறனல்ல செய்யாமை நன்று (157) என்பதும், தாம் தம் தகுதியான் வென்றுவிடல் (158). என்பதும் அப்பெருந்தகையின் அமுத மொழிகள். பொறுமைக்குத் தருமன் என்று முன்னர் குறிப்பிட் டேன். அதனை ஈண்டுச் சிறிது விளக்குவேன். கிருட்டிண னோடு பாண்டவர்கள் கலந்து யோசிக்கின்றனர். சந்து செய்தருளுமாறு வேண்டுகின்றான் தருமன். சிந்துரத்தின் மருப்பு ஒசித்த செங்கண்மாலை கண்ணனைத் தருமன் வேண்டுவது : முந்து ஊர்வெம் பணிக்கொடியோன் மூதூரில் நடந்து,உழவர் முன்றில் தோறும்