பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 13.3 நந்து ஊரும் புனல்நாட்டின் திறம்வேண்டு; நாடுஒன்றும் நல்கான் ஆகில்; ஐந்து ஊர்வேண்டு;அவைஇல்எனில் ஐந்துஇலம்வேண்டு: அவை மறுத்தால் அடுபோர் வேண்டு.”* இதைக்கேட்டிருந்த வீமனால் பொறுக்க முடியவில்லை; வெறுத்துக் கூறுகின்றான் : விரிகுழல் பைந் தொடிநாணி வேத்தவையில் முறையிடுநாள் வெகுளேல்!” என்று, மரபினுக்கும் நமக்கும், உலகு உள்ளளவும் தீராத வசையே கண்டாய்! எரிதழல்கா னகம்அகன்றும் இன்னமும்செம் பகைமுடிக்க இளையா நின்றாய்! அரவு உயர்ந்தோன் கொடுமையினும் முரசு உயர்த் தோய்! உனது அருளுக்கு அஞ்சி னேனே!' என்று, இதில் தருமன் மற்றவர்கள் பொறுக்க முடியாத அளவுக்குப் பொறுமை காட்டியதை அறிகின்றோம். இந்தக் கதையில் வேறொரு நிகழ்ச்சியின் மூலம் பாரதி தருமனின் பொறுமையை வீமன் மூலமாகவே காட்டுகின்றான். துச்சாதனன் திரெளபதியை அவைக்கு இழுத்து வருகின்றான். 'ஆடை குலைவுற்று நிற்கின் றாள்!-அவள், ஆவென்று துடிக்கின்றாள்! இந்த பரிதாப நிலையைக் கண்டு வீமன் வெகுண்டு கூறுவது : சூதர் மனைகளி லே-அண்ணே! தொண்டு மகளி ருண்டு சூதில் பணயமென்றே-அங்கோர் தொண்டச்சி போவ தில்லை. 123. வில்லிபாரதம் - கிருட்டிணன் தூது-9 124. டிெ. டிெ-11