பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 34 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை 'ஏது கருதிவைத்தாய்?-அண்ணே! யாரைப் பணயம் வைத்தாய்? மாதர் குலவிளக்கை - அன்பே வாய்ந்த வடி வழிகை ஆடி யிழந்து விட்டாய் -. தவறு செய்து விட்டாய் - அண்ண்ே! தருமங் கொன்று விட்டாய். சோரத்தில் கொண்ட தில்லை;-அண்ண்ே!. சூதிற் படைத்த தில்லை! வீரத்தி னாற்படைத் தோம்-வெம்போர் வெற்றியி னால்படைத் தோம்; சக்கர வர்த்தி என்றே - மேலாம் தன்மை படைத்திருந் தோம்: பொக்கென ஒர்கணத்தே - எல்லாம் போகத் தொலைத்து விட்டாய். நாட்டையெல் லாந்தொலைத் தாய் -அண்ணே! நாங்கள் பொறுத்தி ருந்தோம் மீட்டும் எமைஅடிமை செய்தாய் மேலும் பொறுத்தி ருந்தோம். துருப தன்மக ளைத்-திட்டத் துர்ய்நன் உடற்பிறப்பை இருபகடை என்றாய் - ஐயோ! இவர்க் கடிமை என்றாய்! இதுபொ றுப்ப தில்லை. தம்பி! எரிதழல் கொண்டு வா கதிரை வைத்திழந் தான் அண்ணன் கையை எரித்திடு வோம்: 425. பா. ச. சபதச் சருக்கம்-273, 274, 276, 277, 278, 279, 280, 281.