பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 黄蕊 இங்கு தருமனின் அளவற்ற பொறுமையையும் காண்கின் றோம்; தம்பியரின் பொறுமையையும் ஒரளவு பார்க்க முடிகின்றது. அறத்தின் உருவம் போல்வான் பொறை யுடைமைக்கு இன்றளவும் எடுத்துக்காட்டாக நிற்கின் தறான். பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழோடு’ பொலிகின்றான். 6. அழுக்காறாமை : அக்கம் பக்கத்தார் சீருடனும் சிறப்புடனும் நன்றாக வாழும்போது அன்புடையவர்கள் அதைக் கண்டு நன்கு மகிழ்வார்கள். அதுவே அன்பின் நெறியாகும். பிறர் சிறப்புடன் வாழ்வதைக் கண்டு மனம் பொறுக்காமல் புழுங்குவது அன்பற்ற குறையையே காட்டும். ஆகையால் அன்பு நெறியில் வாழ்வோருக்குப் பொறாமை கூடாது. தன்நெஞ்சத்தில் பொறாமையின்றி வாழும் தன்மையையுடையவனாக இருப்பின் அதுவே சிறந்த ஒழுக்க நெறியாகக் கொள்ளப்படும். நண்பர், பகைவர் என்ற வேறுபாடு இன்றி வாழும் தன்மையை ஒருவன் பெற்றால் அதுவே அவன் பெற வேண்டிய பேறுகளுள் நிகரற்றதாக இருக்கும். ஒழுக்காறாகக் கொள்க. ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு (161) விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லை யார்மட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் (162) நெஞ்சத்தில் பொறாமை இருந்தால் அது பிறர்க்குத் தீங்கு செய்யத் தூண்டும். அவ்வாறு தீங்கு செய்தால் குசய்தவருக்கே தீங்கு நேரிடும்; துன்பம் உண்டாகும். ஆதலால் அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீங்கு செய்யார். - அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற் றின் ஏதம் படுபாக்கு அறிந்து (164)