பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

冠3台 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை என்பது பொய்யாமொழி. பொறாமைக்கு இலக்கணமாய்த், துரியோதனனைப் படைத்துக் காட்டுகின்றான் பாரதி. துரியோதனனுக்கு ஒரு குறையும் இல்லை. கரியோராயி ரத்தின்-வலி, காட்டிடுவோன்’ என்று வேதமுனி பேசிடும் படியான தோள்வலியுடையவன். அவன் செல்வச் செழிப் பைப் பாரதி, எண்ணிலாத பொருளின் குவையும் யாங்க ணுஞ்செலும் சக்கர மாண்பும் மண்ணி லார்க்கும் பெறலரி தாமோர் வார்க டற்பெருஞ் சேனையு மாங்கே விண்ணி லிந்திரன் துய்ப்பன போன்று வேண்டும் இன்பமும் பெற்றவன்' என்று காட்டுவான். ஆனால் தருமபுத்திரன், அரச வேள்வி இயற்றிப் பெருஞ் சிறப்புடன் இந்திரப் பிரஸ்தத் தில் வாழ்கின்றதைக் கண்டும், பாரத நாட்டிலுள்ள முடி வேந்தர் கொண்டுவந்த திறைப் பொருள்களையும் பரிசுப் பொருள்களையும் கண்டும் அவன் காய்ந்த நெஞ்சில்' பொறாமைத் தீ கொளுந்துவிட்டு எரிகின்றது. மனம் புழுங்குகின்றான். இவற்றை எண்ணி ஏழையாகி இரங்க லுற்றான்’ என்கின்றான் கவிஞன். தான் பொறாமைத் தீ அவன் நெஞ்சில் பற்றி எரிகின்றது என்றான். பாரதி சொல்வதைக் கண்டு மகிழ்வோம். குன்ற மொன்று குழைவுற் றிளகிக் குழம்பு பட்டழி வெய்திடும் வண்ணம் கன்று பூதலத் துள்ளுறை வெம்மை காய்ந்து எழுந்து வெளிப்படல் போல 126. பாஞ். சப : 19 127. இவற்றின் விவரங்களை பா. ச. 20-37பாடல் களில் கண்டு மகிழலாம்.