பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 1.37 நெஞ்சத் துள்ளோர் பொறாமை எனுந்தீ நீள்வதால் உள்ளம் நெக்குரு கிப்போய் மஞ்சன் ஆண்மை மறத்திண்மை மானம் வன்மை யாவும் மறந்தனன் ஆகிப் பஞ்சை யாமொரு பெண்மகள் போல பாலர் போலும் பரிதவிப் பானாய்’ என்று காட்டுவான். வில்லி கூட துரியோதனனிடம் எழுந்த பொறாமையை இங்ங்ணம் வருணிக்கவில்லை. இந்தப் பொறாமையே அவனை அழித்து விடுவதைப் பாரத இதிகாசம் நமக்குக் காட்டும் படிப்பினை. பொறாமையுடையார்க்கு வேறு பகை வேண்டா; பொறாமையே போதும். பகைவர் கெடுதி செய்யத் தவறினாலும் பொறாமை தவறாமல் கேடு விளைவித்து விடும். ஆகையால் நெஞ்சில் எழும் பொறாமையைப் பொல்லாத பகையாகக் கருதிப் போக்கவேண்டும். அழுக்காறு உடையார்க்கு அதுசாலும்; ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது (165) என்பது வள்ளுவம். துரியோதனனின் பொறாமையே பாரதப் போருக்குக் காரணமாதலால், அவன் பொறாமை யால் படும் மனக்குமுறலையும் அதனால் அவன் படும் அவத்தையையும் பாரதியார் இதிகாசத்திற்கேற்ற விரி வுடன் அழகு பெறச் சித்திரித்துக் காட்டுவார். -'அந்தக் காளை யருச்சுனன் கண்களிலும் மாண்ட திறல்வீமன் - தட மார்பிலும் எனதிகல் வரைந்துளதே." 128. பாஞ்ாவி சபதம்-38, 39 129. பாஞ்சாலி சபதம் - அழைப்புச் சருக்கம்-20