பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹器 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை என்று துரியோதனன் வாக்காக வெளிப்படும் அடிகட்கு 'அட்சரலட்சம் கொடுக்கலாம் என்று பழைய முறையில் சொன்னாலும் மனநிறைவு கொள்ள முடியவில்லை. இந்தப் பொறாமையே தீய சிந்தனையைத் தூண்டி திய வழியைக் காணச் செய்கின்றது. யாது நேரினும் எவ்வகை யானும் யாது போயினும் பாண்டவர் வாழ்வைத் இது செய்து மடித்திட எண்ணிச் செய்கை யொன்றறி யான்திகைப் பெய்தி சூதும் பொய்யும் உருவெனக் கொண்ட துட்ட மாமனைத் தான்.சரண்' எய்துகின்றான். பின்னர் நடைபெற்ற கதையை தாம். அறிவோம். பிறருடைய ஆக்கத்தைக் கண்டு மனம் பொறுக்காத, தன்மையே பொறாமை ஆதலின், ஒருவர் மற்றொரு வர்க்குப் பொருள் கொடுப்பதைக் கண்டாலும் பொறாமை, ஏற்படுவதுண்டு; அவ்வாறு பொறாமை கொள்கின்றவன் தான் அழிவதும் அல்லாமல் தன்னைச் சார்ந்தவர்கள் அழிவதற்கும் காரணம் ஆவான்; அவனுடைய சுற்றமும் உணவு உடை முதலியன இல்லாமல் வறுமையால் கெட் டொழிந்து வாடிக் கெடும். கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் (165) என்பது வள்ளுவம். இதனால் வள்ளுவரும் அழுக்காறு என ஒரு பாவி’ (168) என்று கூறி தன் வெறுப்பைப் புலப்படுத்துகின்றார். அது இம்மையில் செல்வத்தைக் கெடுத்து மறுமைக்கண் நரகத்தில் செலுத்தி விடும் என்றும் கூறுகின்றார். மேலும் திருமகள் அவன் குணத் 130. பா. ச. அழைப்பதுச் சருக்கம்-39