பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 芷3莎 தைப் பொறுக்காமல் தன் மூத்தவளைக் (மூதேவி) காட்டி விடுவாள் (167). மாவலி வாமனனுக்கு மூன்றடி மண் வழங்குவதைத் தடுத்து நிறுத்தும் சுக்கிரனை நோக்கி ஈகையின் சிறப்பை எடுத்தோதுகின்றான் - கம்பநாடன் ஏழுகவிகளில். இவற். றுள் முதல் ஆறு கவிகள் படர்க்கையாக அமைந்துள்ளன: ஏழாவது கவி முன்னிலையில் அமைந்துள்ளது. எடுத்தொரு வருக்கொருவர் ஈவதனின் முன்னம் தடுப்பது நினக்கழகி தோ? தகவில் வெள்ளி கொடுப்பது விலக்குகொடி யோய்! உனது சுற்றம் உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்', {தகவு - நற்குணம்; வெள்ளி சுக்கிரன்) இந்தப் பாடலில் மேற்குறிப்பிட்ட வள்ளுவரின் கருத்த மைந்து இருப்பதைக் கண்டு மகிழலாம். பொறாமைப்படுவதால் ஒரு பயனும் இல்லை. வேண்டுமானால் இரத்தக்கொதிப்பு கிடைக்கலாம். பிற ருக்கு உள்ள நன்மையையும் இன்பத்தையும் தான் அடை வதாக இருந்தாலும் பொறாமைப் படலாம். ஆனால் பொறாமைப்படுவதால் உள்ள வளமும் கெடும்; முன் ன்ேற்றம் அடைய வழியும் அமையாது (169), பெரும் பாலும் பொறாமைப்பட்டு முன்னேறியவர்களும் இல்லை; அழுக்காற்றால் நெஞ்சம் அழுங்கியபுன்மாக்காள் 131; பால: வேள்விப்படலம்-33.