பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 4 0 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை இழுக்காற்றால் இன்பநலம் எய்தார்; பராபரமே!’ என்ற தாயுமானவர் வாக்கைச் சிந்தித்தல் வேண்டும். 7. வெஃகாமை : பிறர் ஆக்கம் கண்டு பொறா மைப் படுதலே குற்றமாகும்போது பிறர் பொருளை வெளவக் கருதுவது பெருங்குற்றம் என்பதைச் சொல்ல வேண்டா. அன்புடையவர் பிறருக்குப் பொருள் கொடுத்து உதவுவாரேயன்றி பிறருக்கு உ ரி ைம யான பொருளை வெளவக் கருதார். இது உயிரில் அமைய வேண்டிய நல்ல பண்பாகிய நடுவு நிலைமை என்னும் தெய்வப் பண்பு கெட்டொழிந்து விடுகின்றது. இதனால் ஒருவரது குடியும் அழியும்; குற்றங்களும் அப்பொழுதே விளையும் (171). நடுவு நிலைமையிலிருந்து கோணுவ தற்கு நாண வேண்டும்; அவ்வாறு நாணுவோர் பிறர் பொருளால் தமக்கு ஏற்படும் பயனை விரும்பார்; அந்தப் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்ய மாட் டார்கள். படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நானு பவர் (172) என்பது வள்ளுவம். பிறர் பொருளை வெளவுதலால் வரும் இன்பம் சிறிது; அறநெறியில் வரும் இன்பமோ பெரிது. ஆகையால், அறி வோர் நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அற மல்லாத செயல்களைச் செய்யார் (173). மனம் மிகவும் கொடியது. புலனடக்கம் இல்லாமையால் மனம் பிறர் பொருளை விரும்பிச் சிறிய இன்பத்தைப் பெற அலையும். புலன்களை வென்றோரே குற்றமற்ற அறவுடையோர்; அவர், வறுமையுற்ற காலத்திலும், கவலையுற்றுப் பிறர் — 132. தா. பா. 1. ராபரம் - 297