பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii திருவேங்கடமுடையானின் திருவருளாகும். முதன் முதலில் சந்தித்தபோது நீங்கள் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்! வாழும் இடத்தையொட்டித் தமிழும், பிழைப்பின் நிமித்தத்தை யொட்டி ஆங்கிலத் தையும் படித்தீர்கள். அப்படியே நானும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவன்; வாழ்ந்த இடத்தையொட்டித் தெலுங்கையும் பிழைப்பின் நிமித்தம் ஆங்கிலத்தையும் படித்தேன். இப்பொழுது நாம் இருவரும் தமிழர்களே, சரிதானே' என்றார். ஏழுமலையான் திருவருள்படி நம் வாழ்க்கையும் பணியும் அமைந்தன’’ என்று அடக்கமாக மறு மொழி பகர்ந்தேன். அவரும் என் பணிவைப் பாராட்டி மகிழ்ந்தார். திருப்பதியில் நான் இருந்தவரை இவருடன் மிக நெருங்கிப் பழகினேன். தமிழ்த்துறை என் மணி 'விழாவை மலர் ஒன்றை வெளியிட்டுக்கொண்டாடியபோது (24-9-1977) அந்த விழாவுக்குத் தலைமை தாங்கிச் சிறப் பித்த பெருமகனார். என்வீட்டில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் தவறுவதில்லை.

  • என்னுடைய டாக்டர் பட்டத்துக்குரிய ஆய்வுக் கட்டுரை (ஆங்கிலத்தில் அண்மந்தது) அச்சுவடிவத்தில் பல்கலைக் கழகம் வெளியிட்டபோது அதற்கு அரியதோர் ஆங்கில அணிந்துரை நல்கி ஆசிகூறி நூலுக்குப் பெருமை யும், பொலிவும் தந்த பெருமகனார் இவர்.

இந்த வைணவ மாமணியைப் பார்க்கும்போதெல்லாம் கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன (திருவாய் 10-2: 1) என்ற நம்மாழ்வாரின் பாசுரமும் நினைவுக்கு வரும். என் இதயத்தாமரையில் நிரந்தரமாக எழுந்தருளி யிருக்கும் திருவேங்கடத்தப்பனும் அனந்த சயனத்து அண்ணல் பதுமநாபனாகவே காட்சி அளிப்பான். இத்த கைய எழுச்சியை உண்டு பண்ணும் இப்பெருமகனாருக்கு அறம்-நீதி-முறைமை பற்றிய இந்த அரிய நூலைப் பொருத் தமாக அன்புப்படையலாக்கிய பெருமையுடன் அகமகிழ் கின்றேன்.