பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 丑4夏 பொருளை விரும்பார் (174). பிறர் கைப்பொருளை வெளவ அவாவினால் எதிர்பார்க்கின்றபடி செல்வம் பெரு. காது; மாறாக இருக்கும் செல்வமும் குன்றிவிடும். பிறன் கைப்பொருள் வெஃகாமை செல்வத்திற்கு அஃகாமை’ (178) என்பர் வள்ளுவப் பெருந்தகை. இஃது அறம் என் பதை அறிந்து பிறர் பொருளை விரும்பார் அறிவுடை யார்; இதனால் செல்வத்திரு தான் அடைய வேண்டிய இடம் இது என்று அங்கே சென்றடையும் (179) . உடன்ே பயன் கிடைக்கும் என்று எதிர்பார்த்து வெஃகினால் அது வர வரப் பயன் அவிந்து கெடும் என்பதை, வேண்டற்க வெஃகி.ஆம் ஆக்கம் விளைவயின் மாண்டற்கு அறிதாம் பயன் (177) என்று தெரிவிப்பார் வள்ளுவர் பெருமான். பொருள், அருள் என்னும் இரண்டனுள் அருளே சிறந்தது. இதனை நம்பித் தெளிந்து அதனையே விரும்பி அதற்குரிய அறநெறியில் நின்றவர்கள் பிறர் பொருளை நம்பி அலைதல் ஆகாது. அவர்கள் பிறர் பொருளை விரும்பித் தீய வழிகளைக் கருதுவார்களாயின் அவர்களு டைய வாழ்க்கை கெடும் (176). அறிவுடையவர்களும், அருளுடையவர்களும் பிறர் பொருளை நாடி அலையக் கூடாது என்று அறிவுறுத்துகின்றார். அறிவை நாடியவர் களும் அருளை நாடியவர்களும் பிறருடைய பொருளுக் காக அலைவார்களாயின், இவற்றைச் சிறிதும் அறியாத ஏழை மக்கள் நிலையை என்னவென்பது? அதனால் அப் பெருமான் அறிவில்லாத வறியவர்கட்கு ஒன்றையும் கூறாமல் அமைதியுறுகின்றார். அவர் அறிவுரை அறிவாளி கட்கும் அருளாளர்கட்கு மட்டுமே என்பது அறியத் தக்கது. இவர்களே தாமும் திருந்த வல்லவர்கள் பிற ரையும் திருத்த வல்லவர்கள். வள்ளுவத்தில் அவாவறுத்தல்', வெஃகாமை' 'கள் ளாமை என்னும் மூன்று அதிகாரங்கள் ஒரே கருத்தை