பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

薰尝盛 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை நவில்வது போன்று தோற்றலாம். ஆனால் உண்மை அது வன்று. அவாவுதல் பிறர் பொருளை மட்டுமன்று; தாமே உழைத்துத் தேடினாலும் தேவையற்ற அளவுக்குத் தேட அவாவுதலும், பற்று விட்ட பின்னரும் பழக்கங் காரண மாக அவாவுதலும் அவாவுதலைச் சாரும். கள்ளாமை, அவாவி வெளவுதல் மட்டுமின்றிப் பொருளுக்குரியார் அறியாத வகையில் மறைவாய்க் கவர்ந்து கொள்ளுதலைக் குறிக்கும். களவு செய்யாமை - கள்ளாமை. இவை இரண் டும் துறவறப் பகுதியில் இடம் பெற்றன. வெஃகாமை என்பது பிறர் பொருளை வெளவும் கருத்துடன் அவா . வுதல். இஃது இல்லறவியலில் இடம் பெற்றது. 8. புறங்கூறாமை : தீங்கு விளைவிக்கும் கருத்தோடு பிறர் மறைவில் அவரைப்பற்றிக் கோள் சொல்லுதல் புறங்கூறுதல்’ என்பது. மறைவில் நல்லது கூறுதல் விரும் பத்தக்கது: அஃது அறங்கூறுதல்’ என்று வழங்கப்படும். புறத்தில் பழித்துக்கூறி நேரில் கண்டபோது பொய்யாகப் பழகுவது வஞ்சகம்; அன்பு நிறைந்த வாழ்க்கைக்கு முற்றிலும் முரண்பட்டது. புறத்தே இகழ்ந்துரைத்து நேரில் காணும்போது நண்பர் போல் பொய்யாக நடித்துச் சிரித்துப் பழகுதல் தீமையுடையது. அஃது, அறத்தைக் கைவிட்டு அறம் அல்லாதவற்றைச் செய்வதைவிட மிகத் தீமையுடையது (182). இத்தகையோர் நிறைந்தது இந்த உலகம். பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற பெருமக்களிடையே இப்பண்பு நடைமுறையில் காணப்படுவது மிகவும் வருந்தத்தக்கது. எதிருக்கெதிர் ஒருவருக்கொருவர் தீமை செய்து கொள்ளுவதைவிடக் கொடுமையானது இப்புறங் கூறுதல் என்று வள்ளுவர் கருதுகின்றார். காணாதபோது இவ்வாறு பழித்துச் சொல்லிப் பொய்யாக நடித்துப் போலி வாழ்க்கை வாழ்ந்து ஒருவன் பயன் அடைவதாக வைத்துக்கொள்ளலாம்; அப்போதும் அவ்வாறு உயிர் வாழ்வதைவிட, பொருள் இல்லாமல் வறுமையுற்று இறந்துவிடுவது நல்லது; அந்த