பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 芷3 மரணம் அவனுக்கு அறநெறிப்பட்ட நன்மையைத் தரும்: ஆகையால் அதுவே மேலானது. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறம்கூறும் ஆக்கம் தரும் (183) என்பது வள்ளுவம். ஒருவருடைய எதிரில் நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடிந்து சொன்னாலும் சொல்லலாம்; ஆனால் அவர் எதிரில் இல்லாதபோது பின்வரும் தீமையை ஆரா யாமல் பழிச்சொல்லைக் கூறுதல் ஆகாது. கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க முன்நின்று பின்நோக்காச் சொல் (184) என்பது வள்ளுவர் வாய்மொழி, ஒருவர் அறநூல்களைக் கற்கலாம்; கற்றவற்றை விரித்துரைத்துப் புகழ்ந்து பேச லாம். இது சாத்தான் வேதம் ஒதுவது போல. அவன் வாயிலிருந்து வரும் சொல்லால் நெஞ்சத்தின் நிலைமை தட்டுப்படும். புறத்தே இகழ்ந்து பேசும் குறைபாடு இருந்தால், அதனால் அவர் நெஞ்சத்தில் அறம் இல்லை என்பது தெளிவு (185) புறங்கூறலின் இயல்பை வள்ளுவர், 'புறன் அழி.இப் பொய்த்துநகை (182) புறங்கூறிப்பொய்த்து உயிர்வாழ்தல்" (183), முன்னின்று பின்நோக்காச் சொல்’ (184) பழி கூறுதல் (186), பகச் சொல்லிக் கேளிர்ப்பிரித்தல் (187), புறன் நோக்கிப் புன் சொல் உரைத்தல் (189) என்றெல் லாம் இந்த அதிகாரத்தில் பிட்டுப்பிட்டு வைக்கின்றார். ஆனால் நல்லது கூறாவிடினும், அல்லன செய்தாலும், 'புறன்கூறான் என்றல் இனிது’ (181) என்று முத்தாய்ப் பாகக் கூறுவர். புறங்கூறல் வழக்கத்தைக் கைவிடுவதற்கு வள்ளுவர் பெருமான் வழியொன்றைத் தெரிவிக்கின்றார். புறங்