பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை கூறுவோர் மற்றவர்களின் குற்றங்களைக் காண்பது போல் தம் குற்றம் காண்பதனால் இத்தீய பழக்கம் உண்டாகா. தென்று கூறுவர். ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற் பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு? (190) என்பது வள்ளுவர் வான்மறை. 9. பயனில் சொல்லாமை : இல்வாழ்வானின் பயனற்ற சொற்களைத் தவிர்த்துச் சுருக்கமாய் உரைக்கும் குணம் வேண்டும் என்று கருதுவர் வள்ளுவர். பயனற்ற சொற். களைப் பேசுவதால் காலம் வீணாகின்றது. ஆற்றலும் வீணாகின்றது; கடமையையும் மறக்கச் செய்கின்றது. அடையும் பயனோ பொய்யான இன்பம்; போலி இன்பம்; அறத்தைப் போற்றி வாழ வேண்டியவன் வீண் வாழ்வில் இறங்குதல் கூடாது. இதற்கு வள்ளுவர் கூறும் காரணம், பயனற்ற சொற்கள் பலர்க்கு வெறுப்பைத் தரும் என்பது. ஒன்று; தேவையற்றவை என்பது மற்றொன்று; நன்மைதர மாட்டா என்பது இன்னொன்று; ஒழுங்கையும் நிலைமை. யையும் கெடுக்கும் என்பது பிறிதொன்று பொருளற்ற சொற்கள் உள்ளத்தில் மருளையும் மாசையும் சேர்க்கும் என்பது வேறொன்று. வாய்ச்சொற்கள் நெஞ்ச நிலையைக் காட்டவல்லவை. நெஞ்சில் அறநினைவு இருப்பின், பயனில்லாத சொற்கள் தோன்றா; அந்த எண்ணங்களின் விளைவான பயனில்லாத, சொற்களைப் பேசுதலும் இயலாது. நாவடக்கம் இல்லா மலும் மன அமைதி அற்ற நிலையிலும்தான் பயனற்ற, சொற்கள் பிறக்கும். ஆகவே, பயனில்லாத சொற்களை ஒருவன் விரிவாகப் பேசும் பேச்சு அவனை அறம் இல்லா தவன் - நயனிலன்-என்பதை அறிவிக்கும் (183) அந்தச். சொற்களைப் பாராட்டிக் கொண்டிருப்பவனை மனிதன் என்றும் சொல்லலாகாது; மக்களுக்குள் காணப்படும் பதர் என்றே வழங்கவேண்டும்.