பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - அறம் 互 4 5 பயனில்சொல் பாராட்டு வானை மகன்ளனல் ; மக்கட் பதடி எனல் (196) என்பது வள்ளுவம், வாழ்க்கையில் அரிய பயன் இன்னது என்று ஆராயும் அறிவுடையோர், பெரும் பயன் இல்லாத சொற்களைச் சொல்ல மாட்டார்கள் (198). மயக்கம் தீர்ந்த மாசற்ற அறிவுடையோர் பொருளற்ற சொற்களை மறந்தும் பேசார் (199). ஆகவே பயனுள்ள சொற்கள்ையே சொல்ல வேண்டும்; பயனற்ற சொற்களைச் சொல்லக் கூடாது. பேசுவதால் பயனுண்டா என்று ஆய்ந்து அறிந்த பிறகே வாய் திறக்க வேண்டும்; இல்லையேல் நாவடக்கத் தோடு அமைதியுறவேண்டும் (200). உலகில் செயற்கரிய செயல் செய்த பெரியோர்கள் பலரும் சில சொற்கள் சொல்வதிலே பயன் கண்டவர்கள். ஆகையால் பயனற்ற சொற்களைப் பகர்தல் பண்படாத மனத்தின் குறையாகும் என்று கருதியே வள்ளுவர் பெருமான் பயனில் சொல்லா மையையே ஒர் அறமாகக் காட்டியுள்ளார். 10. தீவினையச்சம்: இல்வாழ்க்கைக்குரிய குணங்களில் தீவினைக்கு அஞ்சுதலும் ஒன்று. 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப் பான்’ என்பது நம்நாட்டில் வழங்கும் ஒரு முதுமொழி. விதைக்கப் பெறுவது எதுவோ அதுவே விளைந்து பயன் தரும். அதுபோல நல்ல செயல் நன்மையையே பயக்கும்: தீயசெயல் தீமையையே பயக்கும். நன்மையோ தீமையோ ஏதாவது செய்தால் முதலில் அதற்குச் செயல் என்று பெயர். ஒருகாலத்தில் நிகழ்ந்து விட்ட அச்செயல் பின் னொருகாலம் வரையில் முற்றி வளர்ந்து பயன் கொடுக்கத் தொடங்கினால் அப்போது அச்செயல் வினை’ என்ற பெயரால் வழங்கும். ஆதலால் தீய செயல் வேறு, தீய வினை வேறு; அங்ங்னமே நற்செயல் வேறு நல் வினை வேறு. தீச்செயல் அச்சத்தை விட அஞ்சத்தக்கது. த.இ.அ-10