பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மிழ் இலக்கியங்களில் அறம் # 47 புறத்தில் தோன்றும் பகை எவ்வளவு பெரும்பகையாக இருந்தாலும் ஒருவாறு ஒடி ஒளிந்து தப்பித்துக் கொள்ள முடியும்; தீவினையாகிய பகை விட்டு நீங்காமல் தொடர்ந்து வருத்தியே தீரும் என்பது இதன் கருத்து. இதனை ஒர் அருமையான உவமையால் விளக்குவார் அப்பெருந்தகை. ஒருவருடைய நிழல் எங்குச் சென்றாலும் விடாமல் அடியின் கீழ் தங்கியிருப்பது போல் தீமையும் செய்தவனை விடாமல் தொடரும் (208). இதனைச் சற்று விரிவாக விளக்குவோம். வெயிலில் ஒருவர் நடக்கும்போது அவரை அவருடைய நிழல் விடாது பின்பற்றிச் செல்வதைக் காண்கின்றோம். அதோடு, நடக்கும் அவர் காலடியை நன்றாகப் பற்றிக்கொண்டு உடும்புப் பிடியாய்த்தொடர்ந்து செல்லுகின்றது. அகன்ற சாலைவழி, குறுக்கு சந்து மொந்து வழிகள், காடு மேடு பள்ளம் வயல் கடற்கரை, கல்லும் முள்ளும் நிறைந்த காட்டு வழி-இவற்றுள் எந்த வழியாகச் சென்றாலும், அந்த நிழல் அவரை விட்டு நீங்குவதில்லை. அவர் அடியை அந்த நிழல் பற்றியது பற்றியதுதான். அவர் நிழல் அவர் காலடியிலேயே உறை கின்றது என்றும் சொல்லலாம். தவிர, அந்த மனிதரது உயரம், குட்டை, அழகு, அழகின்மை, இவற்றிற்கேற்ப அவர் நிழல் மாறுபடுவதில்லை; ஒரே இருள் நிலையில்தான் பின்பற்றுகின்றது. தீவினையை விளக்குவதற்கு இஃது ஒர் அற்புதமான உவமை. இந்த உவமையை மேலும் சிந்தித்தால் வேறு சில இயைபுகளும் புலனாகும். மக்கள் தாம் செய்யும் தீவினை தம்மைப் பின்தொடர்வதை அவ்வளவாகக் கவனிப்ப தில்லை. நிழல் அவர்களைப் பின்பற்றுவதையும் மக்கள் அவ்வளவாக நினைவு கொள்வதில்லை. சில நேரங்களில் பகல் பன்னிரண்டு மணிக்குக் காலடியின் அடியில் கூட அவர்கள் அறியாமல் நிழல் பதுங்கியுள்ளது; விடாமல் உறைகின்றது. இப்படித் தங்கியிருக்கும் நிழல் ஒளி ஒரு