பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩空忍 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை பக்கம் தெரிகின்றபோது மட்டும் ஏதோ பிரிந்து நீளுவது: போலவும் விலகிச் செல்வது போலவும் தோற்றமளிக் கின்றது. அப்போது கூட காலடியைப் பற்றிய பிடியை விடுவதில்லை. தரை மட்டத்திலும் ஏதாவது பக்கவாட் டிலும் ஒளிக்கு அஞ்சி ஒளிந்து கொள்வது போலவும் மறு புறத்தில் கானப்படுகின்றது. இங்ங்னமே மக்கள் அறவழி யில் ஒழுகுகின்றபோது அந்த ஒளிக்கு அவர் தீவினை சற்று அசி ப் பின்வாங்கி விலகுவதாக உள்ளது. ஆகையால் ஒருவர் தம்மைத்தாம் விரும்பிக் காத்துக் கொள்ள வேண்டுமானால் தீய செயல் சிறிதளவும் செய்: யாமல் காத்துக் கொள்ள வேண்டும். தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால் (209) என்பது வள்ளுவர் வாய்மொழி. 11. புகழ்: இல்லற இயலில் இறுதியாக அமைந்தி ருப்பது புகழ்' என்னும் அதிகாரம். வையத்தில் வாழ் வாங்கு வாழும் கணவனும் அவர் வாழ்க்கைத்துணைவி யும் அவர்தம் மக்கட் செல்வங்களும் இல்லறத்திற்குரிய விருந்தோம்பல் முதலிய அறச்செயல்களை நடுவுநிலைமை முதலிய இல்லறத்தாருக்குரிய உயர் குணங்களோடு ஒழுங் காகச் செய்து வந்தால், அவர்கள் மறைந்தாலும் இவ் வுலகில் மறையாமல் எஞ்சி நிற்பது புகழ்தான். வள்ளு வர் பெருமானும் புகழ் அல்லால் பொன்றாது நிற்ப தொன்று இல் (233) என்று தெரிவித்தார். இவ்வுலகில் "புகழ் ஒன்றுதான் ஒன்றாக உயர்ந்தது என்பது அவர் தம் சீரிய கருத்துமாகும். மக்கள் வாழும் முறையில், தானாகப் புகழ் உண்டாக: வேண்டும். புகழ் இயல்பாகத் தோன்ற வேண்டும். புகழ் பெறுவதற்காக அறச்செயல்கள் செய்தல் ஆகாது; அறச் செயல்கள் செய்தலால் புகழ் தானே அமைதல் வேண்டும்.