பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் அறம் 149 இதனால்தான் இந்த அதிகாரத் தலைப்பைப் புகழ் செய் தல்’ என்று அமைக்காமல் புகழ்' என்றே அமைத்தார் ஆசிரியர். புகழுக்கு இசை” என்றும் ஒரு பெயர் உண்டு. சான்றோர்களின் இசைப் பாட்டால் இஃது எக்காலத்தும் நிலைபெறுதலால் இப்பெயர் ஏற்பட்டது. இசை என் னும் எச்சம்' (238) என்பர் வள்ளுவப் பெருந்தகை. இதற்கு எதிர்ச்சொல் வசை'. இல்லறத்தால் தேட வேண்டுவது இசை (புகழ்); தவிர்க்க வேண்டியது வசை’. வசையொழிய வாழ்வாரே வாழ்வார்; இசையொழிய வாழ்வாரே வாழா தவர் (240) என்பது வள்ளுவம். புகழ் விளைவதற்குரிய நற்செயல் களைச் செய்யாவிட்டால் வளம் குறைந்து விடும் (239) என்றும் கூறுவர். சிலர் இல்லறத்தாருக்குரிய அறச்செயல்கைைச் செய்து புகழுடன் வாழ்பவர்களைப் பார்த்துப் பொறாமை கொண்டு அவரை அடிக்கடி வசை கூறுவதுண்டு. புகழுக்கு அறச்செயல் முக்கியம். அதனைச் செய்தால் புகழ் தானே பெருகும். இம்முறையைப் பின்பற்றாமல் சிலர் பிறரை நொந்து கொள்கின்றனர். புகழ்பட வாழாதார், தம்மை நொந்து கொள்வதில்லை. புகழ் இல்லையானால் இகழ் உண்டாவது இயல்பு. தம்மை இகழ்வாரை நொந்து பயன் இல்லை. வள்ளுவர் பெருமான் இத்தகையவர் களைக் கண்டு அவர்கள்மீது கழிவிரக்கம் கொண்டு, புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்? (237) என்று கூறுவார். ஈகையினால் புகழ் ஏற்படுவதால், ஈகை' என்னும் அதிகாரத்தை அடுத்துப் புகழ்' என்னும் அதிகாரம் அமைக் கப்பட்டதாகக் கருதுவர் பலர். இது பொருந்துமாயினும், இதைவிட இல்லறவியலின் குணநலம், செயல் நலம் முதலி