பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

互 50 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை யவற்றால் உலகில் புகழ் விளைகின்றது என்பதற்காகவே இல்லறவியலின் இறுதி அதிகாரமாகப் புகழ்' அதிகாரம் அமைந்துள்ளது என்று கருதுவது பெரிதும் பொருத்தும். 'ஈதல் இசைபட வாழ்தல் உயிர்க்கு ஊதியம் (231) என்னும் குறளில் ஈதல் காரணமாகவும் இசை ஏற்படு கின்றது என்னும் கருத்து பெறப்படுகின்றது என்றாலும், ஈதலால் மட்டுந்தான் இசை உண்டாகும் என்று அதில் வரையறை செய்யப்பெறவில்லை. வேறு பல காரணங் களாலும் இசைபட வாழ்தலும் உண்டு. ஈதல் மற்றெல் லாவற்றையும் விடச் சிறந்த காரணமாதலால் அது மட் டிலும் ஈண்டு குறிப்பிடப் பெற்றது. உரையாசிரியர் ப்ரிமேலழகரும் இசைபட வாழ்வதற்குக் கல்வி ஆண்மை முதலிய பிற காரணம் உள' (231-ன் உரை) என்றும், "ஈதல் சிறந்ததென்பதற்கு ஞாபகமாக ஈதல் என்றார்' என்றும் விளக்கம் கூறியுள்ளதையும் கண்டு தெளியலாம். செய்தித் தொடர்பு முறைகள் வளர்ந்துள்ள இக் காலத்தில் புகழை அண்மைப் புகழ் என்றும், சேய்மைப் புகழ் என்றும் இருவகையாகப் பிரித்து உணரும் முறையில் அதன் சிறப்புத் தெளிவாகும். அண்மைப் புகழ் என்பது, ஒருவனைச் சுற்றி வாழும் மக்கள் அவனுடைய குண நலன்களையும் செயல் வகைகளையும் அறிந்து புகழ்வதா கும். சேய்மைப் புகழ் என்பது, ஒருவனைச் சுற்றியுள்ள வர்கள் வெறுத்தாலும் பழித்தாலும் தொலைவிலுள்ளவர் கள் அவனுடைய உண்மையான பண்புகளை அறியாமல் சிற்சில செயல்களை மட்டிலும் அறிந்து புகழ்வதாகும். வள் ளுவர்காலத்தில் சிறப்பாக விளங்கியது.அண்மைப்புகழாகும். அக்காலத்தில் சேய்மைப்புகழ் விளங்குவதற்கு வேண்டிய வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. இக்காலத்தில் நவீன வசதி களால் சேய்மைப் புகழ் ஓங்க வழி அமைந்தது; அண்மைப் புகழ் தேயக் காரணம் ஆயிற்று. அறநெறியில் வாழ் கின்றவர்கட்குப் புகழ் பெறும் வாய்ப்பு மிகவும் குறைந்து: போய் விட்டது.