பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 五5直 இன்றும் அண்மைப் புகழ் ஒரளவு இருப்பதைக் கான லாம். நல்ல குணங்களையுடையவர்கள் நற்செயல்களை ஆற்றி வருவதைக் கண்டு அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் ஒரளவு அறிந்து புகழ்வதைச் சிற்றுார்களில் காணலாம். பேரூர்களிலும் அவர்களோடு நெருங்கிப் பழகுகின்றவர்கள் மட்டிலும் அறிந்து போற்றும் நிலைமையைக் காணலாம். சேய்மைப் புகழ் உண்மையின் அடிப்படையில் அமைவதும் உண்டு; உண்மையின் அடிப்படை இல்லாமல் அமைவதும் உண்டு. இக்காலம் விளம்பரப் புகழ் பரவி வரும் காலமாகி விட்டதை நாம் உணராமல் இல்லை. சிலர் புகழுக்காகக் காரியங்கள் செய்யப்போய் அந்த நோக்கத்தாலேயே பிறரால் இகழப்பெற்று இகழ்ச்சி அடைகின்றதையும் நாம் காண்கின்றோம். இதிலிருந்து கருவிலிருந்தே புகழுக்குரிய போக்கு அமைய வேண்டும் என்பது புலனாகின்றது. இந்த இயல்பு நுட்பமாகப் புலப்படும்படியாக வள்ளுவர் பெருமான் தோன்றின் புகழொடு தோன்றுக’ (236) என்று அருளிச் செய்துள் ளதை நாம் கண்டு மகிழலாம். அப்பெருமான், உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ் (232) என்றும் கூறியுள்ளார். இக்குறள் சிந்திக்கத்தக்கது. இங்கு உரைப்பார் என்று குறிக்கப்படுவர் பொதுவாக உலக மக்கள். சிறப்பு மக்களாகிய சான்றோர் செய்யுட் களால் இசைக்கும் புகழ் அதைவிட உயர்ந்தது. ஈகை யல்லாத பிற குணநலன்களையும் செயல்களையும் அவர் தம் பாடல்கள் இயைத்தும் மேம்படுத்தியும் பேசும். இத்த கைய பாடல்களால்தான் உயர்ந்தோரின் புகழ் எக்காலத் திலும் நின்று நிலவும். கொடை வள்ளலாகிய பாரியின் புகழ், நெல்லிக்கனி ஈந்த அதிகமானின் புகழ், தலையையும் ஈயத் தயாராக இருந்த குமணனின் புகழ், கபிலர், ஒளவை