பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 53 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை யார் முதலிய சான்றோர்களின் செய்யுட்களால் நின்று நிலவுவதைக் காணலாம். இவர்கள் யாவரும் சிறந்த முறையில் இல்வாழ்க்கையில் நின்று வாழ்ந்த பெரி யோர்கள். மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்த ' பெரியோர்கள் ஆவர். (ஆ). துறவற இயல் இவ்வுலகில் வாழ்க்கை நீடு நிற்பதன்றாய்ச் சடுதியில் எதிர்பாராது மறைந்தொழிவதாலும், நிலை பேறில்லாப் பொருள்கள் நிலையற்ற சிற்றின்பத்தையே தரக்காண்ட லாலும் தொல்காப்பியர், பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும் நில்லா வுலகம் புல்லிய நெறித்தே. * என்ற காஞ்சித் திணை நூற்பாவில் நிலையாமையை” வற்புறுத்தித் தவ வாழ்க்கையின்மூலம் நமக்கு ஒப்பற்ற துணைவனாகவுள்ள இறைவனை இறுகப் பற்றும்படி ஆற்றுப் படுத்துகின்றார். இவ்வாறு ஐம்புலன் நுகர்ச்சி யில் பற்று தீர்தலைத் தொல்காப்பியர் காமம் கீத்த பால் என்று சிறப்பிப்பர். ஆசை நீக்கிய பக்கம்' என்பது இதன் பொருள். மிக்க காமத்து வேட்கை நீங்கின 56T வனும் மனைவியும் வீடுபேற்றினை விரும்பிப் பற்றற்று வாழும் துறவு நிலையை ஆசிரியர், அருளொடு புணர்ந்த அகற்சி என்று குறிப்பிடுவர்.' இதன்ை 183. புறம் - 165 134. புறத்திணை - 18 (இளம்) 135. டிெ - 17 (இளம்) 186. புறத்திணை - 17 (இளம்)