பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 五等3 இளம்பூரணர், 'அருளுடைமை, கொல் லா ைம, பொய்யாமை, கள்ளாமை, புணர்ச்சி விழையாமை, கள் ளுண்ணாமை, துறவு என்பனவற்றைப் பொருந்துதலாம். அவற்றுள் அருளுடைமை யொழிந்த எல்லாம் விடுதலால் அகற்சி' என்றார்’ என்று விளக்குவர். இத்தகைய அருள் வாழ்வினை விரும்பி வேந்தர்களும் தங்கள் அரச பதவி யினைத் துறத்தல் உண்டு. இங்ங்னம் துறக்கும் இயல் பினைக் கட்டில் நீத்த பால் என வழங்குவர் ஆசிரியர்.' துறவறம் என்பது துறவு வாழ்க்கை என்று கூறப் பெறுவதில்லை. ஆதலால் அது வாழ்க்கையாகாது. இல் வாழ்க்கை நடத்துவோரே உள்ளத்தால் வரவர பற்றற்ற துறவியராய் விளங்க வேண்டும் என்பது கருத்து. வாழ்க்கை இழந்தவர்களும் உள்ளத்தால் துறவு கொண்டு நடந்து கொள்ளக் கூடும். புறத்துறவு இங்கே குறிப்பிடப்பெற வில்லை. புறத்துறவு தமிழகத்தின் வழக்கமும் அன்று: இடைப்பட்ட காலத்தில் அயலவர் வருகைகளால் இந்த நாட்டில் கலந்து விட்ட ஒரு புதிய முறை. துறவறவியலில் எந்த இடத்திலும் புறத்துறவு குறிக்கப்பெறாமையே இதற்குச் சிறந்த சான்றாகும். அன்றியும், அது மறுக்கப் பட்ட இடங்களும் இக்கருத்திற்கு அரணாக அமைகின் றன.* நற்செயல்கள் செய்கின்றபோது சிறந்த குண நலங்கள் வேண்டுமாதலால் அவற்றைப் பற்றி மட்டுமே துறவறவியலில் முற்றிலும் ஆசிரியர் வற்புறுத்துவதைக் காணலாம். - இல்வாழ்க்கை நடத்துவோரே வரவர உள்ளத்தால் பற்றற்ற துறவியராய் விளங்க வேண்டும் என்பதாக மேலே 137. டிெ டிெ - 17. "கடிமனை நீத்த பால்’ என்பதும் பாடம். 138. திருக்குறள் - கூடாவொழுக்கத்தில்’ £! :) குறள்கள் காண்க.