பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏每尘 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை குறிப்பிட்டோம். ஆகவே, துறவற இயலில் நாம் காண்பது அகத்துறவு பற்றியேயாகும். இந்த அகத்துறவு நோன்புப் பகுதி ஞானப்பகுதி என்ற இரு பிரிவுகளில் அடங்கும். நோன்புப்பகுதி என்றாலும், தவப்பகுதி என்றாலும் ஒன்றே. நோன்புப் பகுதியை ஒன்பது அதிகாரங்களாலும், ஞானப் பகுதியை நான்கு அதிகாரங்களாலும் விளக்குவர் வள்ளு, வப் பெருந்தகை. மக்களில் அகத்துறவு நிலைக்கு உயர் வோர் சிறுபான்மையோராதலின், அதிகாரங்களைச் சுருக் கமாகவே அமைத்துள்ளார் ஆசிரியர். முதலில் நோன்புப் பகுதியை நோக்குவோம் : 1. அருளுடைமை : இல்லற இயலுக்கு அன்பு அடிப் படையாவது போல துறவற இயலுக்கு அடிப்படையாக இருப்பது அன்பின் முதிர்ச்சியாகிய அருள் அருள்என்னும் அன்பு ஈன் குழவி (757) என்பது வள்ளுவர் வாக்கு. தன்னலப் பற்றில் தான் என்னும் பற்றும் அற்று, எல்லா உயிர்களிடத்தும் நெஞ்சம் நெகிழ்ந்து நிற்கும் பண்பு 'அருள்' எனப்படும். தம் மக்கள் நன்றாக வாழவேண்டும். என்றும், தம் சுற்றம் நன்றாக வாழவேண்டும் என்றும், அன்பு வளர்ந்து எல்லாரும் நன்றாக வாழவேண்டும், எல்லா உயிரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற அருள் நோக்கம் அமையும். எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே.* என்பர் தாயுமான அடிகள். உயிர் இரக்கம் அதாவது சீவகாருண்யம் என்பது தொடர்புடைய உயிர்கள், அல்லாத உயிர்கள் ஆகிய எல்லா உயிர்கள் மேலும் தோன்றுவதாகிய ஆன்ம நெகிழ்ச்சி! இது தோன்றினால் உள்ளத்தில் பற்று பெரும் பகுதி அறும். அதன்பின் 139. பராபரக் கண்ணி. 221