பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் அறம் 155 திருவருள் தோய முற்படும்; அப்படி முற்படும்போது பற்று; முற்றும் அற்றுவிடும். பயன், வீடுபேறு. அற்றது பற்றெனில் உற்றது. வீடுஉயிர்' என்பது நம்மாழ்வாரின் திருவாக்கு. இத்தகைய அருள் ஒருவனிடத்து அமைதல் மிகவும் அரிது. சிறிது முயன்றவரிடத்திலும் பொருள் அமையும்: முயலாதவரிடத்திலும் அமையும்; தகாதவரிடத்திலும் அமையும்; ஆகையால் பண்பட்டவர்களிடத்தில் மட்டும் காணப்படும் அருட்செல்வம் செல்வத்தில் சிறந்த செல்வ. மாகும். பொருட் செல்வம் கீழ் மக்களிடத்திலும் இருப் பதால் அதற்கு அத்தகையச் சிறப்பு இல்லை. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்; பொருட்செல்வம். பூரியார் கண்ணும் உள (241) (பூரியார் - இழிந்தார்) என்பது வள்ளுவம். இவ்விடத்தில் அருள் திருவருள் என்ற இரண்டினிடத்துள்ள வேறுபாட்டை நோக்குதல் இன்றியமையாதது. ஆண்டவன் எல்லா உயிர்களிடத்தும் செலுத்தும் ஆற்றலே திருவருள். அந்த ஆற்றல் இரக்க முடைமையாகிய அருள் (சீவகாருண்யம்) மட்டுமன்று. அது நீதியுடைமை முதலிய பல வல்லமைகளின் தொகுப்பு. மாகும். இரக்கமுடைமையை ஒத்ததாக உயிர்கள் பிற உயிர்களிடத்தில் காட்டும் இரக்கமும் இருப்பதால் திரு வருள் என்பதில் உள்ள அருட்பெயர் இந்த உயிரிரக்கத் திற்கும் அமைந்து விட்டது. அருளுடைமை என்பது துறவற இயலுக்குரிய நோன் புப்பகுதி, ஞானப்பகுதி என்ற இரண்டிற்கும் அடிப் 140. திருவாய் 1:2:5