பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை 5 1 படையானது. ஆயினும் நோன்பிற்கு முக்கிய காரணமாக இருப்பதால் அது முதலில் கூறப்படுகின்றது. திருவருள் ஞானப் பகுதிக்கு முக்கிய காரணம்; திருவருளின் சாயலே உயிரிரக்கம். இதனால் தாயுமான அடிகள், எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணி இரங்கவும் நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே.' என்று அந்தத் திருவருட்சாயலை வேண்டுகின்றார் என்பது அறியத்தக்கது. இன்னொரு கருத்தும் நம் சிந்தையில் எழுகின்றது. ஈண்டு வள்ளுவர் திருவருட் சாயலாகிய உயிரிரக்கம் வாழ்க் கையில் செல்வத்துட் செல்வம் என்றார். ஆனால் பொருட்பாலில் உள்ள கேள்வி என்னும் அதிகாரத்தில் செவிச் செல்வம் செல்வத்துட் செல்வம்' என்று கூறுவ தோடு அமையாது தலைசிறந்த செல்வம் என்றும் அத னை மேலும் உயர்த்திக் கூறுவார். செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை (411) என்று காண்க. இதனால் அருட்செல்வத்திற்கும் கேள்விச் செல்வத்திற்கும் ஏதோ வேறுபாடு இருப்பதாகத் தோன்று கின்றது. அந்த வேறு பாடு யாதாக இருக்கலாம் என்ப தைக் காணலாம். பொருட்பாலில் செவிச் செல்வத்தைச் செல்வத்துள் எல்லாம் தலை’ என்று சொன்னதனால் அது மற்ற பொருட் செல்வம் எல்லாவற்றையும் விட தலைமையானது என்று பொதுவாகப் பொருள் தரக் கூடும் மேலோட்டமாகப் :பார்ப்பதனால். ஆயின் இதைச் சற்று ஊன்றி நோக்கினால் 141. தா - பா : பராபரம் - 65,