பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - அறம் 1 57. உயிரிரக்கமாகிய அருட் செல்வத்திலும் அது தலையானது என்ற நுட்பக் கருத்தும் பொருந்தியுள்ளமை தட்டுப் படாமல் போகாது. பொருட்பாலேயாயினும், இன்பப்பாலே யாயினும் அதில் அறத்தின் சுவடு ஊடுருவி உள்ளது என் பதை முன்னர்ச் சுட்டியுள்ளேன். அதனால் கேள்வி பொருட்டாவில் அமைந்திருந்தாலும் பொருள் பற்றிய உலகக் கேள்விகளை மட்டிலும் அது குறிப்பதன்று ஞானக் கேள்விகளையும் அஃது உள்ளடக்கிக் கொண்டுள்ளது என் பது அறியப் படும். அதாவது, ஞானக் கேள்வியாகிய செல்வம் - திருவருளால் உணர்ந்து ஆற்றல் கொள்ளும் செல்வம் - பொருட்செல்வம் கல்விச் செல்வம் உயிரி ரக் கமாகிய அருட்செல்வம்’ என்னும் எல்லாச் செல்வங்களை விடவும் தலைசிறந்ததாகும் என்பது தெளியப்படும். இது நிற்க, வாழ்க்கையில் நன்னெறியில் நின்று உண்மையை ஆய்ந்து அருளுடையவராக விளங்க வேண்டும் என்பது கோட்பாடு. பலவகையில் ஆராய்ந்தாலும், அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருப்பது புலனாகும்; அது தவிர வேறு துணை இல்லை என்பதும் தெளிவாகும். நல்லாற்றான் நாடி அருளாள்க; பல்லாற்றான் தேரினும் அஃதே துணை (242) என்பது பொய்யாமொழி. எல்லா உயிர்களையும் போற்றி அருள் செலுத்துவோனுக்குத் தன் உயிர் அஞ்சத்தக்க தீவினை இல்லாமல் போகும் என்பர் வள்ளுவப்பெருந்தகை (144). எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்பதே அருளாளர் நோக்கம். ஆதலால் அவருடைய நெஞ்சம் தன்னலம் அற்ற தூய நெஞ்சம் ஆகின்றது. மற்றவர்களின் துன்பமே தம் துன்பமாகவும், மற்றவர்களின் இன்பமே தம் இன்பமாகவும் அவர்கள் உணர்வதால், அவர்களுடைய உயிர்க்கு வரும் துன்பம் இல்லை. ஏதேனும் இடர் வரினும், அந்த இடர் அவர்களை வருத்துவதில்லை. அந்த இடரைத்