பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

〕53 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை தாம் தாங்குவதால் உலகம் இன்பமுறும் ೯ರ್ಿಲ! ra மகிழ்ச்சியோடு அந்த இடரை ஏற்பார்கள்; அதனைக் கண்டு கலங்கித் துன்பம் உறும் தன்மையை அவர்களிடம் காணமுடியாது. பொருள் இல்லாதவர்க்குப் புற உலக வாழ்க்கை இல்லை; அதுபோல அருள் இல்லாதவர்க்கு அக உலக வாழ்க்கை இல்லை. பொருளற்ற வறியவர்கள் உண்ணல் உடுத்தல் முதலியவற்றில் அல்லல் உறுவர். அருள் இல் லாதவர்கள் சிந்தனையிலும் நினைத்தவிலும் இன்பமின்றி வருந்துவார்கள் (247). புற வாழ்க்கையில் பொருள் இல்லாதவர்கள் ஒரு காலத்தில் திடீரென்று செல்வம் பெற்றுச் செழிப்பதும் உண்டு; ஆனால் அருள் இல்லாத வர்கள் அகவாழ்க்கையில் அழிந்தவர்களே; அவர்கள் செழித்து முன்னேறுவது அரிது. பொருளற்றார் பூப்பர் ஒருகால்; அருளற்றார் அற்றார்; மற்றுஆதல் அரிது (248) என்பது வள்ளுவம். இதில் அருள் அற்றார் அற்றார்’ என வரும் இடத்தில் அற்றார்’ என்பதற்குப் பொருள் பூப்பது அற்றார் எனவும் மீண்டும் ஒருகால் அருள் பூப்பதும் அற்றார் எனவும், பொருள்படுதலை அறிக. 'ஆதல் அரிது’ என்பதற்கு மீண்டும் அருளுடைமை மலர்த லும் அதனால் பெறுதற்குரிய திருவருட் பேற்றில் முன்னேறுதலும் அவ்வளவு எளிதில் இல்லை எனவும் கருத்தாதலை அறிக. முதலில் பொருள் இருந்து பின்னால் அற்றுப் போனவர்களும், பிறவியிலேயே பொருளற்றவர் களும், தம் வாழ்க்கையில் இன்னொரு காலத்தில் பொருட் செல்வம் பெறுதல் கூடும்; வறுமையில் இருப்பவர்களில் அருளுடையார் பின்பு நல்லூழ் மலர்ந்து நல்லமுயற்சிகளும் அறிவும் உடையராகிச் செல்வ நிலையில் உயர்வதையும் காண்கின்றோம்.