பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 1 5 9 அருள் இல்லாதவனுக்கு ஒரே ஒரு வழி உண்டு என் கின்றார் வள்ளுவர் பெருமான். அதாவது: தான் தன்னை விட மெலிந்தவரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட வலியர் ஒருவர் தன்னைத் துன்புறுத்த வருங் கால் தான் படும் துன்பத்தை நினைக்க வேண்டும். அவ்வாறு நினையுங்கால் அருளுணர்வு நெஞ்சில் தானா கவே பிறக்கும். வலியார்முன் தன்னை நினைக்க தான்.தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து (25.0) என்பது வள்ளுவம். இவ்விடத்தில், தம்முயிர்போல் எவ்வுயிரும் தான்என்று தண்ணருள்கூர் செம்மையருக்கு ஏவல் என்று செய்வேன் பராபரமே' என்ற தாயுமான அடிகளின் திருவாக்கும் சிந்திக்கத்தக்கது. 2. புலால் மறுத்தல்: உள்ளத்துறவுக்குப் புலால் மறுத்தல் மிகவும் இன்றியமையாதது. புலால் உண்பவன் அருளா வானாக இருக்க முடியாது. அருட்பெருசோதி, தனிப் பெருங்கருணை’ என்ற மூல மந்திரத்தை அருளிய வள் வால் பெருமான் புலால் உண்டதைக் கண்டித்த அளவுக்கு வேறெதனையும் கண்டித்ததில்லை. புலால் மறுத்தலை வற்புறுத்திய அளவுக்கு வேறெதனையும் வற்புறுத்திய தில்லை. சாதி சமயம் முதலிய எல்லாவற்றாலும் ஒருமைப் பாட்டினைக் கண்ட அடிகள் புலை ஒழுக்கம் ஒன்றை மட்டும் கருதி மக்களை அகஇனம், புற இனம் என இரு இனங்களாகப் பிரித்தார். புலால் மறுத்தோர் அக இனத் தார்; அஃதுண்போர் புறஇனத்தார். - 142. தா. ப : பராபரம்-149