பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

真名G தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார்.' என்று இறைவனே தனக்கு அருளினான் என்று கூறுவர். புலால் உண்பவராகிய புறவினத்தாரை அடிகள் தமது உடன் கூட்டத்திலும் சன்மார்க்க சங்கத்திலும் சேர்த்துக் கொண்டதே இல்லை. புலால் உண்ணும் மக்களைக் கண்டு. மயங்கி உள்ளம் நடுங்கி ஆற்றாமல் எலும்பெலாம் கருக இளைத்ததாக இறைவனிடம் விண்ணப்பிப்பர். வண்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல் என்டெலாம் கருக இளைத்தனன் : என்ற அடிகளில் இதனைக் காணலாம். அருளாளன் எல்லா உயிர்க்கும் திங்கு செய்யாமல் வாழக் கருதுவான். அத்தகையவன் தன் உடம்பு வாழ விரும்புவது போலவே மற்ற எல்லா உயிர்களின் உடம்பும் வாழ வேண்டும் என்று விரும்புவான். புலால் உண்டு உடல் உரம் பெறுவதைப் பற்றி எண்ண நேர்ந்தால் அது தன்னல மான கொடுமை என எண்ணுவான். இவ்வாறு எண்ணா மல் தன் ஊன் பெருக்குவதற்காகப் பிறிதோர் உயிரின் ஊனைப் புசிக்கின்றவன் எப்படி அருளுடையவனாக முடியும்? தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன் உண்பான் எங்ங்னம் ஆளும் அருள்? (251) என்பது வள்ளுவம். அறநெறிச்சார ஆசிரியர், 143, 6 (இடை) அருள்விளக்க மாலை - 71 144, 6 (முன்). பிள்ளைப் பெருவிண்ணப்பம் - 41.